ஆசமனம் – அனுஷ்டானம்

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது. :
” ஆசமனம் ”

ஆசமனம் பற்றி தெரிந்துகொள்வோம்

ஆசமனம் என்பதற்கு அகராதியில்

கர்மானுஷ்டானத்தின் ஆரம்பத்திலும்,முடிவிலும், சிறு துளிகலாக மூன்று முறை மந்திரங்களுடன் கூடிய ஜலத்தை (வலது உள்ளங்கையினால்)பருகுதல் என்று பொருள் உள்ளது.

ஆசமனம் என்பது உள்ளத்தையும்,வாக்கையும் தூய்மைபடுத்தும்
செயலாகும்.

பல்வேறு நற்செயல்களுக்கு முன்னும்,பின்னும் இதை செய்வர்.

கை,கால்களை கழுவுதல்,குளித்தல் இவை உடல் தூய்மைக்காக செய்வதாகும்.

ஆசமனம் என்பது உள்ளத் தூய்மைக்காக செய்வதாகும்.

*ஆசமனம் எப்படி செய்வது*

வலது கையை பசுவின் காதுபோல் கோகர்ண முத்திரை செய்துகொண்டு,அதில் உளுந்து மூழ்குமளவிற்கு ஜலம் எடுத்துக்கொண்டு,பிறகு சுண்டு விரலையும் கட்டை
விரலையும் நீக்கி கையை குவித்துக்கொண்டு உறிஞ்சுகின்றபோது ஒலி எழாமல்,கைகள் உதட்டின் மீது படாமல் நீர் பருகுவதே ஆசமனம் எனப்படும்.

இவ்வாறு 3 முறை
மந்திரம் கூறி நீர்
பருக வேண்டும்.

பிறகு உதடுகளை வலதுகை பெருவிரலின் அடியால் இரண்டு தடவை துடைத்து,பின் கட்டை விரல் தவிர நான்கு விரல்களாலும் துடைக்கவேண்டும்.

*ஆசமன மந்திரம்*

இந்த ஆசமன மந்திரமானது அவரவர் குல ஆசாரப்படியும்,குரு உபதேசப்படியும் வேறுபடும்.

சிலர் அச்சுதாய நமஹ:
அனந்தாய நமஹ:
கோவிந்தாய நமஹ: .என்று கூறி செய்வர்.

இது பௌராணிக ஆசமனம் எனப்படும்.

சிலர் ரிக்வேதாயஸ்வாஹா,
யஜுர் வேதாயஸ்வாஹா,
சாம வேதாய ஸ்வாஹா…என்பர் இது
வேதாசமனம் எனப்படும்.

சிலர் ஆத்ம தத்வாய ஸ்வாஹா, வித்யா தத்வாய ஸ்வாஹா,
சிவ தத்வாய ஸ்வாஹா…என்பர் இது தத்வாசமனம் எனப்படும்.

இதில் சிவ தீக்ஷை பெற்ற சிவாசார்ய பெருமக்கள்
ஆத்ம தத்வாய ஸ்வாஹா…இதில் உள்ள ஸ்வாஹா விற்கு பதிலாக ஸ்வதா என்பர்.

மேலும் ஆசமனத்தில் உட்கொள்ளும் நீரானது நம் மார்பு வரை செல்லவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

*ஆசமனம் எப்படி செய்யக்கூடாது*

1.நின்று கொண்டு

2.முழங்கால்களுக்கு வெளியில் கைகளை வைத்துக்கொண்டு

3.உட்கார்ந்து கொண்டு

4.யஞோபவீதம் இல்லாமல்

5.தலை மயிரை விரித்துக்கொண்டு

6.தெற்கு-மேற்கு திசைகளை பார்த்து ஆசமனம் செய்யக்கூடாது.

*சில சிறப்பு விதிகள்*

1.சாப்பிட்ட உடன் ஆசனத்தில் அமர்ந்திருந்தாலும் செய்யலாம்.

2.நதி,குளம்,நீர் நிலைகளில் முழங்கால் அளவு நீர் இருந்தால் அதில் நின்றுகொண்டு ஆசமனம் செய்யலாம்.

முழங்காலுக்கு கீழ் நீர் இருந்தால் அந்த நீர்நிலையில் ஆசமனம் செய்யக்கூடாது.

ஆசமனம் எப்பொழுதெல்லாம் செய்யவேண்டும்? எத்தனை முறை?

• வாய் கொப்பளித்த பிறகு ஒரு ஆசமனம் செய்ய வேண்டும்.

சிறுநீரை மட்டும் கழித்திருந்தால் இரண்டு முறை.

மலமும் கழித்திருந்தால் மூன்று முறை.

• ஸ்நானம் (குளியல்), பானம்(தண்ணீர் குடித்தல்) மற்றும் காதனம்(கடித்து சாப்பிடுதல்) – இவற்றின் ஆரம்பத்தில் ஒரு ஆசமனமும் முடிவில் இரண்டு ஆசமனமும் உண்டு.

• ஆஹாரம் அருந்துவதற்கு முன்பும் பின்பும் இரண்டு ஆசமனம் உண்டு.

• ஜபம், ஹோமம், ஸந்த்யாவந்தனம் போன்ற நித்ய கர்மாக்கள், அர்ச்சனை, தானம் செய்யும் பொழுதும் தானம் வாங்கும் பொழுதும், ஆரம்பத்தில் இரண்டு ஆசமனம்,முடிவில் இரண்டு ஆசமனம்.

*ஆசமனம் செய்ய இயலாத நிலையில்*

ஆசமனம் செய்ய முடியாவிட்டாலும்,
தூய்மையான ஜலம் கிடைக்காவிட்டாலும்,அந்த சமயத்தில் ப்ராம்மணர்கள் தங்கள் வலது காதை தொட்டுக்கொள்ளலாம்.

இது ஆசமனத்திற்கு
சமானமாகும்.

ஏனெனில் கங்கை,ஆதித்தன்,வருணன்,சந்திரன், அக்னி,வாயு இவர்கள் ப்ராம்மணர்களின் வலது காதில் எப்போதும் இருப்பதாக மனுவும்,பராசர ரிஷியும் கூறுகின்றனர்.

விலக்குகள்?

ப்ரசாதம், பழங்கள், தேன், கிழங்கு, எள், கரும்பு, துளசி போன்ற பத்ரங்கள், ஏலக்காய், லவங்கம் போன்ற வாசனை திரவ்யங்கள் ஆகியவற்றை சாப்பிடும்போது, முதலிலும் ஆசமனம் செய்ய வேண்டாம், முடிவிலும் ஆசமனம் செய்ய வேண்டாம்.

யோகா பண்ண டைம் இல்லையா?

ஆசமனம் செஞ்சு பாருங்களேன்.

குக்குடாசனம்

கோழி நிற்கும் நிலையையொத்த ஆசனமானதால் குக்குடாசனம் எனப்பட்டது.

இந்த ஆசனம் உடற் மூட்டுகளை வலுவடையச் செய்யவும், செறிமானச் செயலை மேம்படுத்தவும், மிகுந்த பயனுள்ளதாகயிருக்கிறது

குக்குடாசனம் உங்கள் உடல் கணுக்களை வலிமை படுத்துகிறது.

வயிற்றின் சுவர்களையும் பலப்படுத்தி செரிமானத்திற்கு உதவுகிறது.

பகவானின் நாமத்தை சொல்லிக்கொண்டு இந்த கர்மாவை செய்யும் பொழுது உள்ளம் குளிரும், தூய்மையும் அடையும்.

லோகா சமஸ்தா சுகினோ
பவந்து ……..
………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: