ஆன்மீக சாரலில் நாம் தெரிந்துக் கொள்ளப் போவது
மடி மடி மடி என்றால் என்ன?
மடி (ஆசாரம்) அப்படியென்றால் என்ன? வெறும்னே ஈரத்துணியை
அணிந்துகொள்வதா? செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல்,
மடி மடி என்று சொல்லிக் கொண்டிருந்தால் அது சரியா?
எதையும் தொடாமல் பூஜை செய்யவேண்டும் என்று துவங்கி,
எதையாவது தொட்டு விடுவோமோ – எதாவது நம் மீது பட்டுவிடுமோ
என்பதிலேயே கவனம் செலுத்தி, பூஜை செய்வதையே மறந்து விடுவார் பலர்.
இப்படிதான் பலரும் (ஆசாரம் செய்பவர்கள்) இன்றும் பலர் இருக்கிறார்கள்.
இது பற்றி இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் கேள்விகளுக்கு
அன்றே புரந்தரதாசர் விடை அளித்துவிட்டார். இந்த பாடலில்
அதை பற்றி பார்ப்போம். நிஜமான மடி என்றால் என்ன என்று
தெரிந்து, அதன்படி நடப்போம்.
மடிமடிமடி எந்து அடிகடிஹாருவே
மடி மாடுவே பகே பேருண்டு
பொடவி பாலகன பாத த்யானவனு
பிடதே பாடுவுது அது மடியு (மடி)
மடிமடிமடி என்று அடிக்கடி சொல்வார்கள்
மடி செய்வதற்கு வேறு வழி உண்டு
ஓடி விளையாடும் சிறுவனின் (ஸ்ரீகிருஷ்ணனின்) திருவடிகளை
விடாமல் நினைத்து, அதைப்பற்றி பாடுவதே நிஜமான மடியாகும் (மடி)
பட்டெய நீருளகத்தி ஒணகிஸி
உட்டுகொண்டரே அது மடியல்லா
ஒட்டெயொளகின காம க்ரோத
மத மத்ஸர பிட்டு நடெதரே அது மடியு (மடி)
(கட்டிக்கொள்ளும்) ஆடையை நீரில் நனைத்து, காய வைத்து
அணிந்து கொண்டால், அது மடியல்ல
நம் உடம்பில் இருக்கும் காமம், குரோதம் (கோபம்)
மதம் (கர்வம்), மத்ஸரம் (பொறாமை) ஆகியவற்றை விட்டுவிட்டாலே அது மடிதான் (மடி)
தசமி த்வாதசி புண்ய தினதலி
வசுதேவ சுதனனு பூஜிசதே
தோஷகே அஞ்சதே பரரனு புஞ்சிசதே
யம பாஷக்கே சிலுகுவுது அது மடியே (மடி)
தசமி, த்வாதசி மற்றும் இதர புண்ய தினங்களில்
ஸ்ரீகிருஷ்ணனை பூஜிக்காமல்
எந்தவித பாவங்களும் அஞ்சாமல், அன்னதானம் செய்யாமல்
(இறுதியில்) யமதூதர்களிடம் சிக்குவது – இது மடியா? இல்லை (மடி)
ஹிரியர குருகள ஹரிதாசருகள
சரணகெரகி பலு ஹரிபக்தியலி
பாலிசு எந்து புரந்தரவிட்டலன
இருளு ஹகலு ஸ்மரிசுவுது அது மடியு (மடி)
சான்றோர்களின் குருவின் ஹரிதாசர்களின்
பாதங்களை வணங்கி – எனக்கு ஹரிபக்தி வருவதற்கு
உதவி செய்யுங்கள் என்று – புரந்தரவிட்டலனை
எந்நேரமும் நினைத்துக் கொள்வது – இதுதான் மடியாகும் (மடி)
ஆன்ம சுத்தியுடன் இறைவனை வழிபட வேண்டும் அதுவே
சிறந்த வழி (ஆசாரத்துடன் கூடிய வழி) என்பதை புரிந்து கொள்வோமாக .
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ