அபிராமி பட்டா் அருளிய அபிராமி அந்தாதி.
நவராத்திரி நாட்களில் அனைவரும் பாராயணம் செய்யவும்.
தாா் அமா் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. — காப்பு
குடும்பக்கவலையிலிருந்து விடுபட :
அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
மனக்கவலை தீர :
பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.
இதனை பாராயணம் செய்து வாழ்வில் நலம் பெறுவோமாக…..
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
…….. ஸ்ரீ
Very good initiative. Ambal kripai ellorukkum kidaikattum