ஆச்சார அனுஷ்டானங்கள்

இன்று நாம் தெரிந்து கொள்ளப்போவது :

ஆச்சாரம் மற்றும்
அனுஷ்டானங்கள் :

ஆச்சாரம் என்றால் தூய்மை அல்லது ஒழுக்கம்.

ஆசாரங்கள் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்திற்கும், நீண்ட கால ஆரோக்கிய வாழ்விற்கும் உகந்தவையாகும்.

காலையில் எழுந்து குளிப்பது, தூய , சுத்தமான ஆடைகளை அணிந்து திருநீறு அல்லது திருமண் அணிந்து வழிபடுதல் என்ற முறையில் அசுத்தமானவைகளை விலக்கி, தீட்டு கலக்காமல் ( பிறப்பு, இறப்பு, மற்றும் மாத விலக்கு தீட்டுகள் ) பார்த்து செய்வது ஆச்சாரங்களில் அங்கம்.

ஆசாரங்கள் என்பது எந்த ஒரு மதத்திற்கோ, ஜாதிக்கோ என்று மட்டும் சொல்லப்பட்டது அல்ல.

இன்றைய வாழ்க்கையில் எல்லா சாதியினரும் தம்மை அறியாமலேயே ஒரு சில ஆசார ங்களை கடைபிடித்து வருகிறார்கள், ஆனால் அதற்கெல்லாம் வேறு பெயர்களை சொல்லி அவர்கள் புதிதாக கண்டுபிடித்தது போல செயல் படுத்தி வருகிறார்கள். அதற்கான விஞ்ஞான விளக்கத்தையும் கூறுகிறார்கள்.

அறிவியல் கூறும் சொல்.. ஹை ஜெனிக். (hygeneic). அதனை சுத்தம், சுகாதாரம் என்று சொல்கிறார்கள். இதனை தான் வேதங்களும் சாஸ்திரங்களும் ஆசாரம் என முன்னமே சொல்லி வைத்துள்ளது.

ஆசாரங்கள், பிராமணர்களுக்கு மட்டும் தான் என நினைக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் இன்றளவும் அதை கடைபிடித்து வருகிறார்கள். அவர்கள் மனத்தூய்மை, புற தூய்மைக்கான செயல்களை செய்து வருகிறார்கள்.

அனுஷ்டானங்கள் :

நாம் அன்றாடம் செய்யும் செயல்களுக்கு அனுஷ்டானம் என்று சொல்வர்.
உதாரணமாக : ஒருவர் ஆச்சாரத்துடன்
தினமும் செய்யும் தெய்வ பூஜை யாகவோ, ஜெபமோ, பெற்றோரை வணங்குவதோ, இல்லை நமது தர்மங்களை காக்கும் செயல்களை கடைபிடித்து வருவது தான் அனுஷ்டானம்.

இவ்வாறு ஒருவர் தினசரி விடாமல் செய்துவரும் அனுஷ்டானங்களுக்கு (செயல்களுக்கு ) நித்ய கர்மானுஷ்டானம் என்று கூறுவர்.
இவ் வகையான நித்ய கர்மாக்கள் எந்த பலனையும் எதிர் பாராமல் தனது நித்ய கடமையாக செய்வதாகும்.

எதோ ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அல்லது செயலுக்கான கர்மாக்கள் செய்து பலனை எதிர்பார்ப்பது
காம்ய பூஜா அனுஷ்டானம். இத்தகைய அனுஷ்டானங்கள் குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிட்ட நாட்களில் செய்வதாகும்.

எனவே ஆசாரத்துடன் ச்ரத்தையுடன் ( சிரத்தையை பற்றி முன்னமே பார்த்திருக்கிறோம் )செய்யும் அனுஷ்டானத்தில் மூலம் கிடைக்கும் பலனும் சந்தோஷமும் அலாதியானது.

அநாச்சாரம் : ஆசாரத்திற்கு எதிரானது. ஒழுக்கமற்ற முறையில் கடைபிடிப்பது.

உதாரணமாக குளிக்காமல் இருப்பது, உணவை நின்று கொண்டே சாப்பிடுவது அனுஷ்டானங்களை நியமம் இல்லாமல் செய்வது என இப்படி பலவற்றை செய்வது அநாச்சாரமாகும்.

நாம் சனாதன தர்மத்தில் கூறிய படி ஆசாரத்துடன் கூடிய அனுஷ்டானங்களை கடைபிடித்து வாழ்க்கையில் உயரிய நிலையை பெறுவோமாக……. !

லோகா சமஸ்தா சுகினோ பவந்து …… …….
…….. ஸ்ரீ

1 thought on “ஆச்சார அனுஷ்டானங்கள்”

  1. Ashok Subramaniyan

    சிவ தீக்கை வாங்குவது எப்படி யாரிடம்

    அதற்கு என்ன மாதிரியாக நான் என்னை தயார் செய்ய வேண்டும்

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: