ஆறறிவு யாது

ஆறறிவு என்றால் …….

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

ஓரறிவு உள்ள உயிர்கள் உடம்பால் உலகத்தை அறியும். உடம்பினால் தட்பம், வெட்பம், வன்மை, மென்மை ஆகியவைகளை ஓரறிவினால் அறியும்.

ஓரறிவு : புல், மரம், கொடி, செடி


இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

ஈரறிவு உள்ள உயிரினங்கள் உடம்பினாலும் நாவினாலும் உலகை அறியும். உடம்பினால் ஓரறிவு உயிரினங்கள் அறிகின்ற அனைத்தையும் அறிந்து நாவினால் பலவிதச் சுவைகளையும் ஈரறிவுள்ள உயிரினங்கள் அறியும்.

ஈரறிவு : மெய், வாஆய் (நத்தை, சங்கு)


மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

உடம்போடும் நாவோடும் அறிவதோடு மூக்கினாலும் அறிகின்ற உயிர்களை மூன்றறிவுள்ளவை என்பார்கள். மூக்கினால் நாற்றங்களையும் அந்த உயிரினங்கள் அறிந்துகொள்ள முடியும்.

மூவறிவு : எறும்பு, கரையான் அட்டை


நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

உடம்பு, நாக்கு. மூக்கு ஆகியவைகளோடு கண்களாலும் உணர்வது நான்கறிவு எனப்படும். இந்த நான்காவது அறிவினால் மூன்று அறிவுகளை அறிவதோடு கூடுதலாகக் கண்களால் நிறங்களையும் உருவங்களையும் அறிய முடியும்.

நாலறிவு : நண்டு, தும்பி, வண்டு


ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஐந்து விதமான அறிவுகளை உணர்வதற்கு உடம்பு, வாய், மூக்கு, கண்களோடு செவியும் உதவுகின்றது. நான்கு அறிவுகளோடு கூடுதலாக செவியினால் ஓசைகளை ஐந்தறிவு உயிர்கள் அறியும்.

ஐந்தறிவு :  விலங்கு, பறவை


ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

ஐந்து அறிவுகள் மாக்களோடு நிற்க, ஆறறிவினால் மனிதன் மேலும் உணர்ந்தான். அதற்குக் காரணம் அவனுடைய மனம். அந்த மனதினால் உண்டாகும் சிந்திக்கும் திறன் ஆறாவது அறிவாகும்

ஆறறிவு : மனிதர்


லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: