எல்லாத்திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.
- திருவானைக்காவல் கோயிலின் மூலவரான ஜம்புகேஸ்வரர் 5-ம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதாவது வடமொழியில் ‘அப்பு’ என்பதன் பொருள் நீர் என்பதாகும்.
இந்த லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.
முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்று சொல்லப்படுகிறது.
18 ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்தக் கோயில் ஆரம்பக் கால சோழ மன்னர்களில் ஒருவரான கோச்செங்க சோழனால் கட்டப்பட்டதாகும்.
இங்கு அம்மன் அகிலாண்டேஸ்வரியின் தனி சன்னதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது - புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேனுகந்தநாதருக்கு, தினமும் தேனடையிலிருந்து தேன் எடுத்து அபிஷேகம் செய்யப்படுகிறது.
வேறெங்கும் இதுபோன்று பூஜை முறைகள் நடைபெறுவதில்லை. - தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீட்டாராக உள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய கல்வெட்டு இந்தக் கோயிலில்தான் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில்,
நவக்கிரகங்கள் லிங்க வடிவில் இருப்பதும் இங்குதான். கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். - கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒவ்வொரு நாளும் ஐந்து முறை வெவ்வேறு நிறங்களில் மாறுவதால், “பஞ்சவர்ணேஸ்வரர்” என்கிற சிறப்புப் பெயரில் அழைக்கப்படுகிறார்.
- கும்பகோணத்தில் அமைந்துள் கிள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம், இடைக்காலச் சோழர்களின் காலத்திலிருந்தே இருப்பதாக நம்பப்படுகிறது.
இக்கோயில் சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் சொல்லப்படுகிறது.
ஆண்டுதோறும் மாசிமக விழாவும், 12 ஆண்டுகளுக்கொருமுறை மகாமகப் பெருவிழாவும் இக்கோயிலில் கொண்டாடப்படுவது தனிச் சிறப்பு. - கும்பகோணம் மகாமகம் குளத்துக்கு அருகிலேயே உள்ள சிவாலயமான காசி விஸ்வநாதர் கோயிலில், சிவன் சன்னதியை தவிர நவகன்னியர்களான கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, ,காவேரி, கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, சரயு ஆகிய புனித நதிகளுக்கும் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் குறித்து தேவாரத்தில் பாடல் இடம் பெற்றிருப்பதுடன், இராமாயண காலத்திலேயே இராமரும், லக்ஷ்மணனும் இங்குச் சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது
- கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி, ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் ‘பஞ்சவர்ணேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறது.
- கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் தயாராகும் எந்த நைவேத்தியங்களிலும் உப்பு சேர்க்கப்படுவதில்லை.
- சிதம்பரத்தில் நடராஜருக்கு வலப்பக்கத்தில் சிதம்பர ரகசியம் உள்ளதுபோல், திருவாரூரில் தியாகராஜர் திருமேனியே ரகசியம் உள்ளது. சிதம்பரத்தில் நடராஜர் நின்றாடும் நடனம் ஆனந்த தாண்டவம் என்றும், திருவாரூரில் தியாகராஜர் அமர்ந்தாடும் நடனம் அஜபா நடனம் என்றும் அழைக்கப்படுகிறது. முக்கியமாக இக்கோயிலில், நவக்கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் நின்ற நிலையில் அருள்பாலிக்கும் அபூர்வத்தை இங்கு மட்டுமே காணமுடியும்.
- மயிலாடுதுறையின் மிகப்பெரிய கோயிலாக விளங்கும் ஸ்ரீமயூரநாத சுவாமி கோயில் சுவர்களிலுள்ள மிகப் பழமையான பதிவுகளாகக் குலோத்துங்க சோழரின் பதிவுகள் உள்ளன. அதன் ஆரம்ப கட்டுமானத்திற்கு பிறகு, சற்றே புனரமைக்கப்பட்ட இந்தக் கோயில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக இன்னமும் விளங்குகிறது. இக்கோயிலின் நடராஜ பெருமானுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ‘மயூரா நாட்டியாஞ்சலி’ நிகழ்ச்சி மிகவும் பிரசித்தம் பெற்று விளங்குகிறது.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ