இன்று நாம் காணப்போவது
ஆலய வழிபாடு :
ஆலயம் என்றால் என்ன? ஆ என்றால் ஆன்மா லயம் என்றால் வசப்படுதல். ஆன்மா வசப்படும் இடம் தான் ஆலயம்.
எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருள் யந்திர மற்றும் மந்திர சக்தியால் நிரம்பியுள்ள இடம் ஆலயம்.
சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிரில் சாதாரணமாக ஒரு காகிதத்தை கட்டினால் அது எரியாது, ஆனால் சூர்ய ஒளியை உள் வாங்கக்கூடிய கண்ணாடி ( லென்ஸ் ) வைத்து காட்டினால் அது எறிவதை நாம் பார்க்கலாம்.
இந்த கண்ணாடி போல இறை சக்தியை நாம் ஆலயம் மூலம் பெறுகிறோம்.
உதாரணமாக யூகித்து பாருங்களேன்…… இறைவனது சக்தி பறந்து விரிந்த விண்வெளி போலவும், (சாட்டிலைட் ) ஆலயம் அந்த சக்தியை உள் வாங்கி சிக்னலை கொடுக்கும் டவர் போலவும் இயங்கி நமக்கும் நம் வாழ்க்கைக்கும் சக்தியை கொடுக்கிறது.
ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட ஆலயங்களில் நடைபெறும் ஆறு கால பூஜை விவரங்கள் :
1. உஷக்காலம் : சூர்ய உதயம் முன்பு செய்யும் பூஜை. வேத மந்திரங்களுடன் பூஜைகள் செய்து பள்ளியறையிலிருக்கும் ஸ்வாமியை துயில் எழ செய்யும் பூஜை.
2. காலசந்தி : சூர்ய உதயம் ஆனபின் 9 மணிக்குள் செய்யும் பூஜை.
3. உச்சி காலம் : நன்பகல் செய்யும் பூஜை.
4. சாயரட்சை : மாலை நேரம் செய்யும் பூஜை.
5. இரண்டாம் காலம் : சூர்ய அஸ்தமனம் ஆன பிறகு 1 1/2 மணிக்குள் செய்யும் பூஜை.
6. அர்த்தஜாம பூஜை .: ஸ்வாமியை பள்ளியறைக்கு எழுந்தருள செய்யும் பூஜை.
இப்படியாக எப்பவும் பூஜைகளும் வேத மந்திரங்களும் ஓதி வழிபடும் இடம் ஆலயம்.
வீட்டிலும் தனிப்பட்ட முறையிலும் பூஜைகள் செய்து வழிபட்டாலும், எப்பாழுதும் வேத மந்திரங்களின் ஒலியும், தொடர்ந்து ஆகம விதிகள் படி செய்யப்படும் பூஜைகள் மூலம் முழு சக்தியும் அங்கு நிரம்பி இருப்பதால் நாம் அங்கு சென்று வழிபட்டு வந்தால் அந்த அதிர்வலைகளின் நேர்மறை சக்தி நமக்கு கிடைக்கும். அப்படி ஆலயம் சென்று வழிபட்டால் நம்மையறியாமலே நமக்குள் மாற்றத்தையும், மன அமைதியும், புத்துணர்வும் கிடைப்பதை உணரலாம்.
எப்பவும் இறை சக்தியை நம்மால் உணர தான் முடியும், அனுபவிக்கதான் முடியும். காற்றை நேரில் பார்க்க இயலாது ஆனால் அனுபவிக்க முடியும். அது போல தான் இறைவன் சக்தியும்.
வேத மந்த்ர, யந்த்ர சக்திகளை
கொண்ட ஆலயத்திற்கு தினமும் சென்று ( செல் போன் ரீசார்ஜ் செய்வது போல ) நம் உடலுக்கும் மனதுக்கும் நேர்மறை எண்ணங்களை ரீசார்ஜ் செய்து வாழ்க்கையில் வளமுடன் வாழ்வோமாக………
லோகா சமஸ்தா சுகினோ
பவந்து………
……… ஸ்ரீ