இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது :
” இரெண்டெழுத்து மந்திரம்”
” ராம.”
நம்முடைய இந்து சமயத்திலே ராமனும், கிருஷ்ணனும் பிரிக்கமுடியாத தெய்வங்கள்.. ஒருவர் தட்சிணாயனம், மற்றொருவர் உத்தராயணத்தில் பிறந்தவர்கள். ராமர் உத்தராயணத்திலே பங்குனி மாதக் கடைசியிலே சைத்ரமாச, சிரேஷ்ட மாசத்திலே சுக்ல பட்ச நவமியில் அவதரித்தார். கிருஷ்ணன் அஷ்டமியிலே அவதரிக்கிறார். ராமன் திரேதா யுகத்திலே, கிருஷ்ணன் த்வாபர யுகத்திலே, . அங்கே ராமன் தர்மத்தை வாழ்நாள் முழுவதும் நடத்திகாட்டினார். கண்ணபிரான் தர்மத்தை தன் வாழ்நாள் முழுவதும் நடத்திக் காட்டியேதாடு மாத்திரம் இல்லாமல், அவருடைய பகவத் கீதையை நமக்கு அருளிச் செய்தார்.
நாராயணாய மந்திரத்தில் ஜீவ அக்ஷரம் “ரா” . அவ்வெழுத்து இல்லையேல் நா அயனயா என்றும், வழிகாட்டதவன் என பொருள்.
அதே போல் ” நமசிவாய,” மந்திரத்தில் ஜீவ அக்ஷரம் “ம ” அவ்வெழுத்தை எடுத்துவிட்டால்
நசிவாய என்றும் மங்கலத்தை வழங்காதவன் என பொருள்..
ஆக எட்டு எழுத்துமந்திரங்களின் உயிர் எழுத்தான ரா , ஐந்தெழுத்து மந்திரத்தின் உயிர் எழுத்தான “ம” என்ற இரண்டு எழுத்துகளும் சேர்ந்து ” ராம ” என்ற அற்புத நாம பிறந்தது.
நம் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைக்கு முக்கிய காரணம் ” பயம்”.
இன்றைய சூழ்நிலையில் கண்ணுக்கு தெரியாத கிருமியின் மூலம் மிகவும் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள எத்தனையோ வழிமுறைகளை பின்பற்றினாலும் அதோடு நம் முன்னோர்கள் கூறிய சில ஆன்மீக வழிகளையும் பின்பற்றுவது நல்ல பலனை தரும்.
அந்த மஹா மந்திரம். ” ராம” நாமம்
நாம் மூச்சு உள் வாங்கும்போதும் , வெளியே விடும்போது ” ராம ” நாமம்
கலந்திருக்க வேண்டும்.
எப்பெல்லாம் நம் மனதில் பயம், கஷ்டம், ஏற்படுகிறதோ அப்பெல்லாம் இந்த ராம நாமத்தை ஜபித்து கொண்டே இருக்கலாம்.
இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல
இனம் புரியாத நம்பிக்கையும்,
தைரியமும் வந்து சேரும் என்பது உறுதி.
அஞ்சனை மைந்தன் என்றாவது தோல்வி அடைந்ததுள்ளாரா? நிச்சயம் இல்லை! வெற்றியின் மைந்தன் ஆஞ்சநேயர்.
மருத்துவர்கள் உடல் பிரச்சனை தீர மருந்து கொடுக்கிறார்கள். அந்த மருந்தில் என்ன இருக்கிறதென்று பார்ப்பதில்லை. சாப்பிட்டபின் நோய் குணமாகிறது. அது போல ” ராம” நாமத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்காமல் நம்பிக்கையுடன் மனமுருகி ஜபித்தால் நல்ல பலன் தரும்.
ராம நாமம் சொல்ல எந்த நியமும்
கிடையாது. மிக எளிய நாமம்.
சாப்பிடும் போது, நடக்கும் போது, நிற்கும்போது என எப்பவும் ” ராம” நாமத்தை ஜபித்து கொண்டே இருங்கள். எப்படிப்பட்ட பினியாக இருந்தாலும், தோஷமாக இருப்பினும், அதிலிருந்து விடுபட மன தைரியம், போராடும் தன்மையும் கிடைக்கும். வெற்றி நிச்சயம்.
உங்கள் கையில் உள்ள விஷம் கூட அமிர்தமாக மாறும் சக்தி கொண்டது இந்த ” ராம ” நாமம்.
இதனை வெறும் 5 நிமிடம் மனதை ஒருநிலை படுத்தி ராம நாமத்தை உச்சரித்து விட்டு , பிறகு உங்கள் பிரச்சனைக்கான தீர்வை சிந்தித்து பாருங்கள் , தீர்வு கிடைக்கிறதா இல்லையா என்று.இதனை கூறியவர் ” காஞ்சி மஹா
பெரியவா ”
ராம நாமத்தை சொன்னால் காலனும் அருகில் வரமாட்டான், ஹே ! மானிடா அதை சொல்ல உனக்கு என்ன கஷ்டம் என்கிறது
இந்த நாமாவளி…..
“ராமா ராமா ராமா என்றொரு நாமம் சொல்லடா. .
பாமரனே உனக்கதில் பாரம் என்னடா
காலன் அவன் பொல்லாதவன் விட மாட்டான்
நான் ராம பக்தன் என்று சொன்னால் தொடமாட்டான்.”
இத்தகய பெருமை வாய்ந்த ராம நாமத்தை ஸ்ரீ ராம நவமி யான இன்று , தற்போது நம்மையெல்லாம் வாட்டி வதைக்கும் ” கொரோனா ” வைரஸ் நோயிலிருந்து மீள எல்லோரும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே ” ராம
ராம ராம ” என்று ஜபித்து அவன் அருளாலே நலமுடன் வாழ பிராத்திப்போமாக !.
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம
நாம வரானநே …….
லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …….
……..ஸ்ரீ