இறை நாமங்களை சொல்வோம்

நாம் இன்று தெரிந்து கொள்ள இருக்கும் ஆன்மீக தகவல்….

” இறை நாமங்களையே
சொல்வோம் ”

நாம் தினமும் காலை எழுந்தது
முதல் இரவு படுக்கும் வரை எத்தனையோ விதமான பணிகளை செய்கிறோம்.
உலக வாழ்க்கையான மாயையில் சிக்கி இறைவனை நினைக்கும் நேரம் கூட வாய்ப்பதில்லை.

எதிலும் அவன் எல்லாவற்றிலும் அவன் என்ற பரம் பொருளை நம் வாழ்க்கையில் சதா இறை நாமம் சொல்லி பழகலாமே !.

தினமும் காலை எழுந்திருக்கும் போதே சிவ சிவ என்றோ நாராயண என்றோ ஓம் ஓம் என்றோ முருகா என்றோ ராம் ராம் என்று சொல்லுங்கள்.

நீங்கள் எது பேசினாலும் ஆரம்பத்திலும், பேசி முடித்த பின்பும், உணவு உண்ணும் போதும், இரவு படுக்கும் போதும் சிவ சிவ , நாராயண, ராம் ராம், ஓம் ஓம், முருகா என உங்களுக்கு பிடித்த நாமத்தை சொல்லி வரலாமே !.

உங்களுக்கு தொலைபேசி / கைபேசி அழைப்பு வந்தால் “ஹலோ” என்ற சொல்லை தவிர்த்து விட்டு உங்களுக்கு பிடித்த நாமத்தை சொல்லி பேசலாமே !

இப்படி நீங்கள் தினமும் எதிலும் அவன் நாமத்தை சொல்வதால் நீங்கள் உங்களையறியாமலே ஒரு நாளைக்கு குறைந்தது 108 முறையாவது உச்சரித்திருப்பீர்கள்.

இப்படி செய்வதால் உங்கள் சொல்லும் செயலும் நேர்மறையான எண்ணத்தையும் நல்ல அதிர்வலைகளையும் கொடுக்கும்.

நல்லதே பேசுங்கள் நல்லதே நினையுங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை !.

உலக வாழ்கையிலிருந்து நம்மை கரை சேர்ப்பது அவனது நாமத்தின் பலம் தான்.

இன்று முதல் எல்லோரும் இதனை கடைபிடிக்கலாமே !.

லோகா சமஸ்தா சுகினோ
பவந்து……
…….. ஸ்ரீ

1 thought on “இறை நாமங்களை சொல்வோம்”

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: