எச்சில் இலையை எடுத்த கிருஷ்ணர்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது :

எச்சில் இலையை எடுத்த கிருஷ்ணர்

வாசுதேவம் சுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகதகுரும்

மகாபாரத போர் ஆரம்பிக்கும் முன் அர்ஜுனன் கிருஷ்ணரை பார்த்து, கிருஷ்ணா.

என்னால் இந்த போரில் ஈடுபட முடியாது. என் சொந்தங்களை எதிர்த்து என்னால் காண்டீபத்தை உயர்த்த முடியாது . போர் வேண்டாமே என சொல்கிறான்.

உடனே கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்கிறார். இன்றைய காலத்தில் அவரது உபதேசத்தை படிப்பவர்கள், அவரால் உபதேசம் மட்டுமே செய்ய முடியும்.

ஆனால் அவரது வாழ்வில் அப்படி நடந்து காட்டவில்லை என்பர்.

கிருஷ்ணர் இந்த பூமியில் வாழ்ந்த காலங்களில் எப்படி இப் பூமியில்
மேன்மயானவராக வாழ்ந்து காட்டியுள்ளார் என்பதை காட்டுகிறது
இவ் சம்பவம்.

ஒரு சமயம் பாண்டவர்கள் ராஜ சூய யாகம் செய்ய எண்ணி ஏற்பாடு செய்தனர். யாகத்திற்கு எல்லா நாட்டு
மன்னர்களையும் அழைத்தனர்.
அவ்வாறே எல்லா நாட்டு மன்னர்களும் வந்து சேர்ந்தனர்.

அப்போது யாகத்தின் போது முதல் மரியாதை யாருக்கு செய்வது என்ற பேச்சு எழுந்தது. அப்போது பீஷ்மர்
கிருஷ்ணன் தான் சிறந்தவன் அவருக்கு தான் முதல் மரியாதை செய்வது சிறந்தது என்றார்.

தொடர்ந்து அதை ஆமோதிக்கும் விதமாக அர்ஜுனனும்
கிருஷ்ணருக்கு செய்யும் முதல் மரியாதை எல்லா உயிர்களுக்கும் செய்வதாக இருக்கும் என்றார்.

அனைவரும் ஒருமனதாக ஒத்துக்கொள்ள , ஒருவர் மட்டும் எதிர்த்தான். அவர் தான் சிசுபாலன்.
அதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டு , கிருஷ்ணர் சிசு பாலனை தன் சக்ராயுதத்தால் வீழ்த்தினான்.

பிறகு எல்லோரும் சேர்ந்து கிருஷ்ணருக்கு முதல் மரியாதை செய்துவிக்கப் பட்டது. கிருஷ்ணரை ரத்தின சிம்மா சனத்தில் அமர வைத்தனர்.

எல்லோரும் யாகத்தின் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். திடீரென கண்ணனை அங்கு காணவில்லை அனைவரும் பதறி போயினர்.

கிருஷ்ணன் விருந்து அளிக்கும் மண்டபத்தில் , விருந்து
சாப்பிடவர்களின் எச்சில் இலையை எடுத்து அப்புற படுத்தும் பணியினை செய்து கொண்டு இருக்கிறார்.

அதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதை அறிந்த பாண்டவர்கள் ஓடோடி வந்து, கிருஷ்ணா! கிருஷ்ணா! என பதறி, நீ ஏன் இந்த பணியினை செய்கிறாய்.

இது என்ன விபரீதம்,! இந்த பணியை செய்ய எத்தனையோ ஆட்கள் உள்ளனர்.

உடனே இதை நிறுத்திவிட்டு, வா வந்து உன் ரத்தின சிம்மாசனத்தில் அமரவேண்டும் என வேண்டுகின்றனர்.

அவர்களை பார்த்து கிருஷ்ணன் கூறுகிறான், எச்சில் இலையை எடுப்பது என்ன அவ்வளவு இழிவான செயலா? இங்கு பணி செய்பவர்கள் இலையை எடுக்கும் போது இங்கும் அங்கும் தரையில் சிந்தி விடுகின்றனர்.

தரையும் அசுத்தமாகி விடுகிறது. இதனால் அடுத்த பந்திக்கு வருபவர்களுக்கு சங்கட மாக இருக்கும்.

எனவேதான் நான் அவர்களுக்கு இலையை எப்படி எடுக்க வேண்டுமென கற்று கொடுத்து கொண்டிருக்கிறேன் என்றார்.

எச்சில் இலையை சிந்தாமல் எடுங்கள் என்று சொல்லியிருக்கலாம், ஆனால் சொல்வதை விட செய்து காட்டுவது தானே சிறந்தது.

அது மட்டும் அல்ல என்னை பொறுத்தவரை எந்த வேலையும் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பேதம் கிடையாது.

எப்படி முதல் மரியாதை பெறுவது ஒரு வேலையோ அதுபோல இலையை எடுப்பதும் ஒரு வேலை தான்.

அதனை வேறு படுத்தி பார்ப்பவன் ஒரு மூடன் என்றார் கிருஷ்ணர்.

ஒரு வேளை நான் எச்சில் இலையை எடுக்க தயங்கியிருந்தால், நான் முதல் மரியாதையை பெற தகுதியற்றவனாக ஆகிவிடுவேன் என்று கூறுகிறார் கிருஷ்ணர். பாண்டவர்கள் வாயடைத்து நிற்கின்றனர்.

இப்படி கிருஷ்ணர் தான் பூமியில் வாழ்ந்த வாழ்க்கையில் பல விஷயங்களை அனுபவித்து ஆராய்ந்து பின்னரே அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார்.

இவ்வாறாக வாழ்க்கையில் எந்த செயலும் உயர்ந்தது, தாழ்ந்தது இல்லை என்பதை உணர்த்துகிறார்
பகவான் கிருஷ்ணன்.

கிருஷ்ண! கிருஷ்ண! கிருஷ்ணா!!

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …..

…….. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: