இன்று நாம் தெரிந்து கொள்ள போவது :
” எட்டு திசைகளின் பெருமை ”
சித்தர்களின் ஆழ்ந்த தெளிவுகள் மட்டுமே நமக்கு பாடல்களாய் கிடைத்திருக்கிறது. இவற்றை கட்டுக் கதைகள் என ஒதுக்கி விடாமல், சித்தர்கள் ஏன், எதனால் அத்தகைய தெளிவுகளுக்கு வந்தனர் என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கும், நவீன அறிவியலுக்கும் இருக்கிறது.
அந்த வகையில் தேரையரின் ஒரு பாடலை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
“சாதிக்கும் கீழ்த்திசை சம்பத்துண்டாம்
தவறா தென்கிழ்திசை சஞ்சலமே செய்யும்
ஆதிக்கும் தென்திசை யாயுசு விருத்திக்கும்
ஆகா தென்மெற் திசைக்கு பொருளே சேதம்
வடதிக்கு மேற்திசை மத்திபமே நோயாம்
வடமேற்கு இல்லறம் விட்டதுவே ஓட்டும்
சோதிக்கும் வடதிசை மத்திபமே சாவாம்
சொல்லரிய வடகிழக்கு உத்தமன் தான் பாரே”
– தேரையர் –
இந்த பாடலில் எட்டு திசைகளைப் பற்றியும் அந்த திசைகளை நோக்கி செய்யப் படும் செயல்களின் பலன்களையும் குறிப்பிடுகின்றார்.
அதாவது…
கிழக்கு திசை நோக்கிய செயல்கள் செல்வத்தையும்,
மேற்கு திசை நோக்கிய செயல்கள் உடல் நலிவையும்,
தெற்கு திசை நோக்கிய் செயல்கள் ஆயுள் விருத்தியையும்,
வடக்கு திசை நோக்கிய செயல்கள் மரணம் அல்லது முடிவையும்,
தென் கிழக்கு திசை நோக்கிய செயல்கள் மன சஞ்சலத்தையும்,
தென்மேற்கு திசை நோக்கிய செயல்கள் கையிருப்பு செலவாவதையும்,
வட கிழக்கு திசை நோக்கிய செயல்கள் உத்தமர்களாக்கும்,
வட மேற்கு திசை நோக்கிய செயல்கள் இல்லறத்தை துறக்கும்
என வரையறுத்துக் கூறுகிறார்.
பண்டைய தமிழர்களின் கட்டிடக் கலைகள், வழிபாட்டு முறைமைகள்,வாழ்வியல் நடைமுறைகள் எல்லாம் இதனையொட்டியே அமைந்திருந்தன என்பதற்கு பல குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.
இந்த தகவல்களை வெறுமனே மூட நம்பிக்கை என்று புறந்தள்ளாமல் இதன் பின்னால் இருக்கும் கூறுகளை ஆராய வேண்டியது நம் கடமை.
நான்கு திசைகள்
பொதுவாக, எந்த திசையை நோக்கிய மனையாக இருந்தாலும், அதற்குரிய நான்கு பிரதான திசை அதிபர்களை அறிந்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப கட்டமைப்பை வடிவமைப்பது முக்கியம். அனைத்து திசை மனைகளுக்கும் இந்த விதி பொருந்தும். கிழக்கு திசைக்கு இந்திரன், மேற்கு திசைக்கு வருணன், வடக்கு திசைக்கு குபேரன் மற்றும் தெற்கு திசைக்கு எமதர்மன் ஆகியோர் அதிபதிகளாக அமைகிறார்கள்.
கோண திசைகள்
அதேபோல இருதிசைகளின் சந்திப்பாக அமையும் நான்கு மூலைகளுக்கும் அவற்றிற்குரிய திசை அதிபர்கள் உண்டு. அதாவது, வடகிழக்குக்கு ஈசானியன், தென்கிழக்குக்கு அக்னிதேவன், தென்மேற்குக்கு நிருதி தேவன் மற்றும் வடமேற்குக்கு வாயு தேவன் என்று அஷ்ட திக்குகளையும் இயற்கை சக்திகளின் நிலையை குறிக்கக்கூடிய அதிபதிகளையும் நிர்ணயம் செய்து அதன்படி கட்டமைப்புகளை வடிவமைத்தார்கள் முன்னோர்கள.
வடக்கு : செல்வத்தின் தன்மை, மகிழ்ச்சி, அறிவு, ஆற்றல், பெண்களின் வாழ்க்கை ஆகியவற்றைக் குறிக்கும் திசை.
வடகிழக்கு : உடல்நலம், அறிவு, முன்னேற்றம், புகழ், செல்வம், வம்ச விருத்தி ஆகியவற்றைக் குறிக்கும் திசை.
கிழக்கு : ஆண்களின் உயர்வுக்கும், புகழுக்கும் உரிய திசை. அறிவு, ஆற்றல், தந்தை, கௌரவம், பதவி ஆகியவற்றைக் குறிக்கும் திசை.
தென்கிழக்கு : சுபகாரியம், பெண்களின் உடல் நலம், ஆண்களின் நன்நடத்தை, காமம், கலைகளில் தேர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும் திகை.
தெற்கு : பெண்களின் தன்மை (தாய், மனைவி, மகள்) நீதி, நேர்மை, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைக் குறிக்கும் திசை.
தென்மேற்கு : புத்திரபாக்கியம், குடும்பத் தலைவன், மூத்த மகன், மூத்த மகள் ஆகியவர்களின் குணங்கள், உடல்நலம், (ஆண், பெண்) நல்லெண்ணம், தொழில் ஆகியவற்றைக் குறிக்கும் திசை.
மேற்கு : ஆண்களின் புகழ், கௌரவம், உடல் நலம் ஆகியவற்றைக் குறிக்கும் திசை.
வடமேற்கு: குடும்ப உறவுகள், உடல் உறவுகள், மனநிம்மதி, நட்பு, வியாபாரம், வழக்குகள், அந்தஸ்து ஆகியவற்றைக் குறிக்கும் திசை
இதனை அடிப்படையாக கொண்டு தான் வாஸ்து உருவானதாக கூறுகிறார்கள்.
அஷ்டதிக் பாலகர்கள் :
கிழக்கு. :. இந்திரன்
தென் கிழக்கு. : அக்னி
தெற்கு. :. யமன்
தென் கிழக்கு. :. நிருதி
மேற்கு. :. வருணன்
வட மேற்கு. :. வாயு
வடக்கு. :. குபேரன்
வடகிழக்கு. : ஈசான்யன்
இயற்கை நமக்கு வகுத்து கொடுத்துள்ள திசைகளையும் அதன் தேவதைகளையும் போற்றி பயன் பெறுவோமாக.
லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து ………
……ஸ்ரீ
|