பக்தியின் பரிமாணம் :
சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.!
பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.!
தண்ணீருடன் பக்தி சேரும்போது அது தீர்த்தமாகிவிடும்.!
பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.!
இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.!
பக்தியில் வீடு திளைக்கும்போது, அது கோயிலாகிவிடும்.!
செயல்களுடன் பக்தி சேரும்போது, அது சேவையாகிவிடும்.!
வேலையுடன் பக்தி சேரும்போது, அது கர்மவினையாகிவிடும்.!
பிரம்மச்சரியத்தோடு பக்தி சேரும் போது அது துறவறம் ஆகின்றது.!
இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!
மனிதனுள் பக்தி முழுமையடையும் போது அவன் ஞானியாகிவிடுகிறான்..!!
பத்தியால் யானுனைப் …… பலகாலும்
பற்றியே மாதிருப் …… புகழ்பாடி
முத்தனா மாறெனைப் ….பெரு
வாழ்வின்
முத்தியே சேர்வதற் …… கருள்வாயே
உத்தமா தானசற் …… குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் …… கிரிவாசா
வித்தகா ஞானசத் …… திநிபாதா
வெற்றிவே லாயுதப் …… பெரு மாளே!
இப்படியாக எதிலும் பக்தியை செலுத்தி நல்ல பலன்களை பெறுவோமாக
லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …..
……… ஸ்ரீ