நாம் அறிந்து கொள்ள போகும் மந்திரம் ” ஓம் ”
ஓம் என்பதை ஓங்காரம் என்று குறிப்பிடுவர். இதுவே உலகின் முதலான ஆதிஒலி. மந்திரங்களை ஓங்காரம் சொல்லி உச்சரித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். நசிகேதன் என்ற சிறுவனுக்கு, எமதர்மன் இந்த மந்திரத்தின் மகத்துவத்தை கடோபநிஷத்தில் உபதேசித்து உள்ளார்.
வேதம் எல்லாம் பிரபஞ்சத்தின் ஆதாரமான பிரணவம் எனப்படும் ஓம் என்பதைப் போற்றுகின்றன. பிரணவம் என்றால் என்றும் புதியது. புனிதமானதும், என்றும் புதியதுமான ஓம் என்னும் பிரணவம் அழிவே இல்லாத தத்துவப் பொருளாகும்.
வேதமே ‘ஓம்’ என்ற பிரணவத்தில் அடக்கம் என்பதால், வேதம் முழுவதும் படிப்பதற்கு சமமானது “ஓம்” என்ற பிரணவ மந்திரம்.
” ஓம் “….. மந்திரங்களின் மூலாதாரமாகவும், முதன்மையாகவும் உள்ளது.
“ஓம் “…… பிரணவ மந்திரம் ஆகும்.
“ஓம் “……. என்பது அ உ ம் என மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது.
அ என்பது இறைவனையும், உ என்பது உலக உயிர்களையும், ம் என்பது பஞ்ச பூதங்களான இயற்கையையும் குறிக்கிறது.
கந்த புராணத்தில் பிரம்மன் ( படைப்பு கடவுள்) பிரணவ மந்திரத்தையும் அதன் பொருளையும் மறந்தான் அதனால் கந்தன் அவனை சிறையில் அடைத்தான். பிரம்மன் சிறைப்பட்டதால் படைப்பு தொழில் நடைபெறவில்லை. ஈஸ்வரன் பிரம்மனை விடுவிக்க கோரி கந்தனிடம் கேட்டான்
ப்ரணவ மந்திரத்தின் பொருளைக்கேட்டான் ஈஸ்வரன் .கந்தனே தந்தையாகிய ஈஸ்வரனுக்கு ப்ரனவமந்திரத்தின் பொருளை உபதேசித்தான். இது ஓம் என்னும் ப்ரணவ மந்திரத்தின் பொருளையும் அதன் சிறப்பையும் விளக்கும் ஒரு நிகழ்வு ஆகும்.
யாரெல்லாம் பரம்பொருளாகிய ஓம்
என்ற ஓர் எழுத்து சொல்லை உச்சரித்து கொண்டும் என்னை மனதில் கொண்டு பூத உடலை விடுபவன் மேலான கதியை அடைவான்…. ( பகவத் கீதை)
“ஓம் “…….. பகவத் கீதையில் ஏக அக்ஷரமாக விளங்கும் ஓம் காரத்தை புகழ்வது குறிப்பிடத்தக்கது.
“ஓம் ” என்ற மந்திரத்தை உச்சரிப்பதால் நம்மை சுற்றியும் அமைதியும் நல்லவித அதிர்வலைகளையும் கொடுக்க வல்லது.
“”ஓம் ” என்ற மந்திரத்தை உச்சரிப்பதால் இரத்த அழுத்தம் சீராகி இருதய துடிப்பு சரியான முறையில் இயங்கும்.
“ஓம் ” என்ற மந்திரம் தூய ஒலி யும் அதிர்வலைகளும் கொடுக்கவல்லது.
“ஓம் ” என்ற ஒலி ஒருவரது மனதை ஒருமுக படுத்தி எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்தி தியான நிலைக்கு அழைத்து செல்லும் சக்தி வாய்ந்தது.
‘ ஓ ‘ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ ம் ‘ இன் உச்சரிப்பு நீண்டதகவும் இருக்கவேண்டும்.
ஓம் என்ற ஓங்கார மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் உயர்த்தி சொல்கின்றன.
ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி
ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்
ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்
ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே…….. ( திருமூலர் )
சட்டை முனி சூத்திரத்தில் :
” ஒடுக்கமடா ஓங்கார கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே
பிறந்தாச்சு … ( சட்டை முனி )
எல்லா மந்திரங்களும் ஓம் என்ற சொல்லுடன் ஆரம்பிப்பது ஒன்றே இதன் பெருமையை உணர்த்தும்.
மந்திரங்கள் தெரியாதவர் கூட இந்த ‘ ஓம் மந்திரத்தை சொல்லி வந்தால் அந்த இடத்தில் நல்ல அதிர்வலைகள், மற்றும் மன அமைதி கிட்டும்.
லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து ……..
……… ஸ்ரீ