கஜகர்ணம்

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : கஜகர்ணம்

“கஜகர்ணம் “அடித்து பார்த்துவிட்டேன். ஒன்றும் முடியவில்லை “

ஒரு செயலை செய்ய முயற்சித்து முடியாமல் போகும் போது ,கடைசியில் பலரும் சொல்லும் வார்த்தை இது.

அது என்ன கஜகர்ணம் ?.

அழகாக விளக்கம் தருகிறார் வாரியார். மனிதர்கள் முன்று வகை உண்டு

  1. கஜ கர்ணம்
  2. அஜ கர்ணம்
  3. கோ கர்ணம்

 

1. கஜகர்ணம்

யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது !

அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல், பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள்…

அவர்களை ‘ கஜகர்ணம் ‘ போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .

2. அஜகர்ணம்

ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும்.

அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள்…. திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.

… அவர்களை ‘ அஜகர்ணம் ‘ போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .

3. கோகர்ணம்

பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும், அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும் !

அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் .

இவர்களை ‘கோகர்ணம் ‘ போடுபவர்கள் என்று அழைக்கிறோம்  ( திருமுருக கிருபானந்த வாரியார். )

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: