இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது :
” கந்த புராணம் விளக்கம் ”
மூவிரு முகங்கள் போற்றி!
முகம் பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி! காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலர்அடி போற்றி! அன்னான்
சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி! போற்றி!
முருகன் என்றாலே அழகு தான். அழகு என்றாலே முருகன் தான்.
முருகனுக்கு கந்தன், சுப்ரமணியர், குமரன், சரவணன், ஆறுமுகன் என பல பெயர்கள் உண்டு.
தமிழ் கடவுள் முருகன். தமிழ் என்றாலே எளிமை, தமிழ் என்றாலே அன்பு.முருகன் என்ற சொல்லே அன்பின் வடிவம்.
குழந்தையின் சிரிப்பில் இறை வனை காணலாம். இயற்கை எல்லாமே முருகனின் வடிவம் தான்.
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் முருகனை பல விதமாக
பார்க்கலாம்.
இறைவன் இசை வடிவம். இசையாகவும், இசை வடிவமாகவும் உள்ள இறைவனை இசையால் வழிபடுவது நமது வழக்கமாக உள்ளது. இறைவன் இசை பாடும் மனதில் குடியிருக்கிறான்.
“பாடும் பணியே பணியாய் அருள்வாய் ” என பாடுகிறார் அருணகிரி நாதர்.
நாவுக்கரசர் நாம் ஒவ்வொருவரும் செய்யும் செயலுக்கும் கிடைக்கும் பயனை சொல்கிறார்..:
ஆலயத்தை தூய்மை படுத்தினால் வாழ்கையில் இன்பம் பெருகும்.
இறைவனுக்கு மலர்கள் தொடுத்து கொடுத்தால் :. மோட்சம் கிடைக்கும்
ஆலயத்தில் விளக்கு ஏற்றினால் :
நல்ல ஞானம் கிடைக்கும்.
இறைவன் புகழ் பாடினால் : அருள் செய்ய என்னிடத்தில் அளவில்லை என்று இறைவன் கூறுகிறார்.
தூய்மையான இடத்தில் முருகன்
இருப்பான். நாம் நம் மனதை தூய்மையாக வைத்திருந்தால் இறைவன் அங்கு வசிப்பது நிச்சியம்.
நன்றி மறக்க கூடாதது என்பதையே சொல்லித்தரும் நெறி நூலாகவே
கந்த புராணம் திகழ்கிறது. சத்தியத்திற்கு எடுத்து காட்டு ஹரிச்சந்திர புராணம், தர்மம் வெல்லும் என்பதை சொல்வது மஹாபாரதம்.
புராணம் என்றால் பழமையானது.
கந்தனின் பழமையை கூறுவதே கந்த புராணம். கந்தன் என்றால் ஒன்றை பற்றி கொள்வது என பொருள். உலகில் எல்லா உயிர்களுக்கும் பற்றாக இருப்பவன் முருகன்.
கொடி தான் கொம்பை பற்றிக் கொள்ளும். கொம்பு ஒரு போதும் கொடியை நோக்கி வராது. அதுபோல நாம் தான் இறைவனை பற்றிக்கொள்ள வேண்டும். இறைவனுக்கு வேண்டியவர் வேண்டாதவர் என பாகுபாடு கிடையாது.
சுப்ரமணியர் சூர பத்மனை கொல்ல வில்லை. சம்ஹாரம் செய்கிறார்.
ஸம்ஹாரம் என்பது அழிப்பதல்ல.
எதிரியின் மனதில் உள்ள தீயவற்றை அழித்து , தீயவனை மன மாற்றம் செய்து ஆட்கொள்வது ஆகும்.
சூர பத்மன் மனதில் ஆணவம் வெளிப்படுகிறது. இறைவன் அவன் உடலிலிருந்து உயிரை பிரித்து இரண்டாக ஒன்று சேவலகவும் , ஒன்று மியிலாகவும் ஏற்றுக் கொள்கிறார். மயில் முருகனின் வாகனம் ஆனது. சேவல் கொடியாக ஆனது. ஆணவம் இருந்தால் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் அழிந்து விடுவான் என்பதை உணர்த்துகிறது இந்த
“கந்த புராணம்”.
இப்படிப்பட்ட கந்த புராணத்தை எழுதியவர் யார்?
கந்த புராணத்தை எழுதியவர் “கசியப்ப சிவாச்சாரியார் “. இவர் காஞ்சி மாநகரில் பிறந்தவர். இவரது தந்தை காளத்தி என குறிப்பிட பட்டுள்ளது. இவரது இளமை கால பெயர் கவி வீரராகவன்.
“சின்ன சின்ன முருகா முருகா
சிங்கார முருகா “….. என்ற பாடல் நமது காதில் ஒலிக்க………
கந்த புராணம் எப்படி இயற்றப்பட்டது என்பதை நாளை பார்ப்போம்.
நாளையும் வருவான் கந்தன்…..
லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …….
……….. ஸ்ரீ