இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது :
“கந்த புராணம் ”
( பகுதி 4 )
பிரமதேவனுக்கு தட்சன், காசிபன்
என்னும் இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் தட்சன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான். ஆனால் வரத்தின் வலிமையினால் ஆணவம் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்ததினால் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்
தாட்சாயினியின் வேண்டுதலுக்கு இணங்க பர்வத ராஜனின் மகளாக பார்வதி என்ற நாமத்துடன் வளர்வாயக, நாமே வந்து மணந்து கொள்வதாகவும் அருளினார்.
சூர பதுமன் :
காசிபனும் கடும் தவதின் பயனாக எல்லா வரங்களையும் பெற்றான்.
அசுரர்களின் குருவின் (சுக்ரன்) மூலம் ஏவப்பட்ட ” மாயை “என்ற அசுர பெண்ணின் மீது கொண்ட மோகத்தால் தனது தவ வலிமையை இழந்தான்.
காசிபனுக்கும் மாயைக்கும் மனித தலையுடன் சூர பத்மனும்,.சிங்க முகத்துடன் சிங்காசுரனும், யானை முகத்துடன். தாரகசுரனும், ஆட்டின் முகம் கொண்டு அசுகி யையும் பெற்றெடுத்தனர்.
சூர பதுமன் சர்வலோகங்களையும் அரசாளவும்,சர்வவல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து; 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் ஆரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேரு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான்.
ஆணவத்துடன் ஆட்சி செய்து வந்த அவனது ஆட்சியில் தேவர்கள்பலவிதமான துயரங்களுக்கு ஆளானர். கொடுமை தாங்காத தேவர்கள் திருமாலை நாட,
திருமாலோ, சிவன், பார்வதியை திருமணம் செய்து கொண்ட பிறகு சிவன் மூலம் குமார சம்பவம் நிகழும்
அதன் பின் அசுரர்கள் அழிவர் என்றார்.
சண்முகன் பூமியில் உதித்த விதம்:
சிவன் பார்வதி திருமணம் முடிந்த பிறகு தேவர்கள் கைலாயம் சென்று சிவபெருமானை வேண்ட, சிவபெருமானும் தேவர்களை காக்க தன் நெற்றி கண் மூலம் ஆறு தீ பிழம்புகளை உண்டாக்கினார்.
ஈசனுக்கு ஐந்து முகங்கள், ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய ஐந்து முகங்களும், இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய
“அதோமுகம்” (மனம்) என்னும் ஆறாவது முகமும் உண்டு.) அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன.
இந்த தீ பிழம்பின் வெப்பம் தாங்காத தேவர்களும், பார்வதியும், பயந்து ஓட, சிவன் அந்த தீ பிழம்பினை வாயுவிடம் கொடுக்க, அவரும் வெப்பம் தாங்காமல், அக்னி வசம் கொடுக்க, அவரும் அதனை கங்கையில் வண்ண மீன்கள் துள்ளி விளையாடும் சரவண பொய்கையில் தாமரையின் மேல் விட, அங்கே ஆறு தீ பொறிகளும் ஆறு உருவங்களை கொண்ட குழந்தையாக தோன்றியது.
இந்த ஆறு குழந்தைகளுக்கும் ஆறு கார்த்திகை தேவியர் பாலூட்டி சீராட்டி வளர்த்து வந்தனர். அகில லோக நாயகி பார்வதி அங்கு சென்று அந்த ஆறு குழந்தைகளையும் ஒரு சேர அணைக்க, ஆறு உருவம் கொண்ட குழுந்தைகள் ஆறு முகத்துடன் , பன்னிரு திரு கரங்களுடன் ஒரே உடலுடன் தோன்றினார்.
இவரே ஆறுமுகன் என்றும் கார்த்திகை தேவியர்களால் வளர்க்கப் பட்டதால் கார்த்திகேயன் எனவும் வழங்கப்படுகிறார்.
இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.
பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான திருமால், அழிக்கும் கடவுளான ருத்திரன் , படைக்கும் கடவுளான பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும்
அடக்கம்.
முருகப்பெருமான் அக்னி மூலம் தோன்றியவன். இவரே சிவ ஹம்சம் தான். சிவன் வேறு இவர் வேறு அல்ல. இப்படியாக சூர பதுமனை
சம்ஹாரம் செய்யவும் தேவர்களை காகவும் அவதரித்தார்.
சுப்ரமண்யம் சுப்ரமண்யம்
சண்முக நாதா சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் சுப்ரமண்யம்
சரவண பவனே சுப்ரமண்யம்….. என பாடி
நாளை சூரபத்மன் சம்ஹார நிகழ்வை பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …..
…….. .ஸ்ரீ