நமது வேதத்தில் சொல்லாத விஷயங்களே கிடையாது. சூக்தங்களும் பல் வேறு உள்ளது. அவ்வாறு உள்ள சூக்தங்கள் மற்றும் மந்திரங்களின் பலன்கள் என்ன என்பதை சுருக்கமாக சொல்ல முற்பட்டுள்ளோம். பயன்களை தெரிந்துகொண்டு பாராயணம் செய்து வாழ்க்கையில் வளமுடன் வாழ வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
காயத்ரி மந்த்ரம் :
வேதங்களில் முதன் முதலில் எழுதப்பட்ட இம் மந்த்ரம் 24 அசைவுகளை கொண்டது. வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன் என பகவத் கிதையில் பகவான் கிருஷ்ணன் கூறுகிறான். உலகுக்கு முதலில் இம் மந்திரத்தை அளித்தவர் விஸ்வாமித்ரர். (அவர் க்ஷத்ரியர் ) பிராமணர்கள் 3 வேளையிலும் இம் மந்த்ரத்தை தான் ஜபிகின்றனர். இம் மந்த்ரம் யாவருக்கும் பொதுவானது. இதை ஜபிப்பதால் கிடைக்கும் பலன்கள்
எல்லா நிலைகளிலும் வாழ்வை வளப்படுத்தும்.
அறியாமையை விலக்கி தெளிவு ஏற்பட உதவும்.
எந்த வாழ்க்கையானாலும் அதன் உன்னதங்களுக்கான திறவுகோலாக இருக்கும்.
மனதை ஒருமுனை படுத்தி கற்பதை அதிகரிக்கும்.
சுவாசம் சீராக பெரிய மருந்து.
முகத்தில் தேஜஸ் மற்றும் உடல் ஆரோக்யம்.
வாழக்கையில் எல்லாவற்றிலும் வெற்றி.
மிக சக்தி வாய்ந்த இம் மந்திரத்தை சரியான முறையில் உச்சரித்து ஜபித்து வந்தால் பலன் நிச்சயம். இது உண்மை சத்தியம்.
லோகா சமஸ்தா சுகினோ பவந்து……
மேலும் மலரும்.