காலத்தின் அறிய தகவல்கள்

இன்று நாம் தெரிந்து கொள்ளப்போவது :

. “காலத்தின் அறிய தகவல்”

பிரபஞ்சத்தின் முக்கிய யுகங்கள் நான்கு. அவை 1 கிருத யுகம் 2. திரேதா யுகம் 3. துவாபர யுகம்
4. கலி யுகம்.

கிருத யுகம் : அறம் தழைத்து மக்கள் நேர்மையுடன் வாழ்வார்கள்

திரேதா யுகம்: முக்கால் பகுதி அறத் துடன் கால் பகுதி அறம் தவறி வாழ்வார்கள்.

துவாபர யுகம் : சரி பாதி அறமும் சரி பாதி அற நெறி தவறியும் வாழ்வார்கள்.

கலி யுகம். : முக்கால் பகுதி அறம் தவறியும், கால் பகுதி மட்டும் அறத்துடன் வாழ்வார்கள். நேர்மை தவறி வாழ்வார்கள். பகைமை அதிகரிக்கும், மக்கள் வாழ்க்கை ஸ்ரமபடும்.

நான்கு யுகம் சேர்ந்தது ஓர் மஹா யுகம்.

பன்னிரெண்டு மஹா யுகங்கள் ஒரு மன்வந்திரம்.
பதினான்கு மன்வந்திரங்கள் ஒரு கல்பம். இப்படியாக 30 கல்பம்.

நாம் இப்போது ஏழாவது மன்வந்திர த்திலும் ( ,வைவஸ்வத மன்வந்த்ரே)

2 வது கல்பதிலும் ( ஸ்வேத வராஹ கல்பே) இருக்கிறோம்.

வருடங்கள் மொத்தம் 60

வருடத்தில் மொத்தம் அயனங்கள் இரண்டு. 1. தட்சினாயணம் (ஆடி மாதம் முதல் தை மாதம் வரை) 2. உத்தராயணம்.( தை மாதம் முதல் ஆடி மாதம் வரை)

ருதுக்கள் ஆறு : அவை 1. வசந்தருது. 2. கிரீஷ்மருது, 3.வருஷருது, 4. சரத்ருது 5 ஹேமந்ருது,. 6. சிசிரருது (6 ருது x 2 மாதம்)

மாதங்கள் 12 அவை 1சித்திரை, 2 வைகாசி, 3 ஆனி, 4 ஆடி 5. ஆவணி 6 புரட்டாசி 7 ஐப்பசி, 8 கார்த்திகை, 9 மார்கழி, 10 தை 11 மாசி 12 பங்குனி.

பட்சங்கள் 2. அவை (1) அமாவாசை முதல் பௌர்ணமி வரை கிருஷ்ண பட்சம்,.(2 ). சுக்லபட்சம் அமாவாசை முதல் பௌர்ணமி வரை.

த்ரை பட்சங்கள் கொண்டது ஒரு மண்டலம். ( 15 x 3 : 45) 8 மண்டலம்
ஓர் வர்ஷம்..

ராசியின் பெயர்களே மாதத்தின் பெயராகவும் விளங்கும். அவை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்யா, துலா, விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

வாரம் : எழு தினங்கள் :

ஞாயிற்றுக்கிழமை : பானு வா ஸரம். திங்கள் : சோம வாஸரம், (இந்து)
செவ்வாய் :பௌமவாரம், புதன் : சௌம்ய வாஸரம், வியாழன் : குரு வாஸரம், வெள்ளி : சுக்ர வாஸரம், (ப்பிரகு) சனிக்கிழமை: ஸ்திர வாஸரம்.

நக்ஷத்திரம் 27. திதிகள் 14 மற்றும் பௌர்ணமி,. அமாவாசை.

ஒரு நாளைக்கு 60 நாழிகை
ஒரு நாழிகை. …24 நிமிடம்.
2 1/2 நாழிகை … 1 மணி நேரம்
24 மணி நேரம் …… 1 நாள்.

மேலே கூறிய விஷயங்கள் யாவையும் நாம் ஒவ்வொருவரும் அறிந்திட வேண்டியவைகள்.
கூர்ந்து பார்த்தால் மேலே சொன்னவைகள் அனைத்தும் நாம் செய்யும் சங்கல்பத்தில் வரும்.

நமக்கு தெரிந்திருந்தாலும் இந்த தகவல் வரும் தலைமுறைகளுக்கு பயன்படும் என்ற நோக்கத்தில் மீண்டும் நினைவு படுத்தி இருக்கிறேன்.

லோகா சமஸ்தா சுகினோ பவந்து………….
…. .. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: