காலை முதல் இரவு வரை மந்திரங்கள்:

காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பதாக ஐதீகம். ஆகவே, காலையில் எழுந்ததும் நம் உள்ளங் கைகளை விரித்துக்கொண்டு, உள்ளங்கையில் சூட்சுமமாக குடியிருக்கும் ஸ்ரீமகா லக்ஷ்மியை வணங்கியபடி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்

“கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே ஸரஸ்வதீ
கரமத்யே து கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம் ”

பூமித்தாய்க்கு வணக்கம்!

வாழ்க்கை முழுவதும் நம்மைச் சுமந்து காப்பவள் பூமித்தாய். அவளுக்கு நன்றி செலுத்தவும் நம் கால்கள் பூமியை ஸ்பரிசிக்க அனுமதி வேண்டியும் சொல்லி வணங்குவது அவசியம்.

“சமுத்ரவஸனே தேவி
பர்வத ஸ்தன மண்டலே!
விஷ்ணு பத்னி நமஸ்துப்யம்
பாதஸ்பர்சம் க்ஷமஸ்வ மே!! ”

ஸ்நானம் :

கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவிரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்’ என்று நாம் சொல்லி நீராடினோமென்றால், அந்த நீராடல் புனித நீராடல் ஆக மாறிவிடுவதாக ஐதீகம்

உணவு உண்ணும் போது :

உணவு உண்ணும் முன்
தெய்வ நினைவோடு
சொல்ல வேண்டிய ஸ்லோகம்

அன்னபூர்ணே ஸதா பூர்ணே

சங்கர ப்ராண வல்லபே !

ஞான வைராக்ய ஸித்யர்த்தம்

பிக்ஷாம் தேஹி ச பார்வதி !!

உணவுவுக்கு பஞ்சம் வராமல் இருக்க சொல்லவேண்டிய மந்திரம்.

“முக்தாஹார விபூஷிதாம் குசபராநம்ராம் ஸகாஞ்சீகுணாம்
தேவீம் திவ்யரஸாந்ந பூர்ணகர காம்போஜ தர்வீகராம்
த்யாயேச் சங்கர வல்லபாம் த்ரிநயநாமம்பாம் ப்ரவலம்பாலகாம்.”

தினமும் சாப்பிடும் முன் காகத்திற்கு அன்னம் வைப்பது வழக்கம். அதற்கு முன் பூஜையறையில் வைத்து இந்த ‘பலி மந்திரம்’ சொல்வது சிறப்பு.

பெருமாள் பக்தர்கள்,:
“பலிர் விபீஷணோ பீஷ்ம கபிலோ நாரதோ அர்ஜுன!
மஹாவிஷ்ணு ப்ரஸாதோயம் ஸர்வே க்ருஹ்ணந்து வைஷ்ணவா!”
என்று சொல்லி சோறு இட வேண்டும்

சிவ பக்தர்கள்,
“பாண ராவண சண்டேஸ நந்தி ப்ருங்கி ரிடாதய!
மஹாதேவ ப்ரஸாதோயம் க்ருஹ்ணந்து ஸாம்பவா”
என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். ”

நாடு நலம் பெற…

காலே வர்ஷது பர்ஜன்ய:
ப்ருத்வீ ஸஸ்யஷாலினீ
தேஸோஹம் க்ஷோபரஹித:
ப்ராமணஸ்ஸந்து நிர்பயா:

தன ஆகர்ஷண கணபதி மந்திரம்

“ஓம் க்லாம் க்லீம் கம் கணபதயே வரவரத மம தன
தான்ய சம்ருத்திம் தேஹி தேஹி ஸ்வாஹா ”

மாலையில் திருவிளக்கு
ஏற்றியதும் குடும்பத்தினர் அனைவரும் சொல்ல வேண்டிய அபூர்வ மந்திரம் இது

“சிவம் பவது கல்யாணம்
ஆயுள் ஆரோக்ய வர்தனம்
மம துக்க விநாசாய
ஸந்த்யா தீபம் நமோ நம:”

தூங்கும் முன்:

கரசாரண கிருதம் வா கயாஜம் கர்மஜாம் வா
ஸர்வவண நயனஜம் வா மனசாம் வா அபராதம்

விஹிதம். அவிஹிதம்.வா சர்வம் எட்டாத் க்ஷாமஸ்வா
ஜெய ஜெயா கருணாப்தே ஸ்ரீ மகாதேவா ஷம்போ …

தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த தவறான செயல்களை மன்னியுங்கள் என்று வேண்டுவதாகும்.

கெட்ட ஸ்வப்பணம் வராமலிருக்க :

அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸோமம் ஜனார்தனம் ஹம்சம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் துஸ்வப்ன சாந்தயே

ப்ரம்மாணம் சங்கரம் விஷ்ணும் யமம் ராமம் தனும் பலிம் ஸப்தைதான் ய: ஸம்ரேந் நித்யம் துஸ்வப்னஸ்தஸ்ய நிச்யதி.

இந்த மந்திரங்களை சொல்வதால் எங்கும் அவனே ! எதிலும் அவனே என்று அவன் ஸ்மரணையுடன் பிரார்த்திப்போமாக ……..

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து ……

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: