ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது:
நான்காவது விஸ்வரூப நிகழ்ச்சி
மஹாபாரத போர் நடந்து கொண்டிருக்கிறது.
அவசியம் இல்லாமல், நாம் அடுத்தவர் வீட்டில் உண்ணுதல் கூடாது. அப்படி சாப்பிட்டால் சல்லியன் கதைதான்.
சல்லியன் யார் ?
சல்லியன், சகாதேவனுக்கும், நகுலனுக்கும் தாய் மாமன். மஹாரதன், நல்ல தேரோட்டி. தனது மருமானுக்கு உதவ சல்லியன் தேரை எடுத்துக் கொண்டு வருகிறான். சல்லியனின் மிகப்பெரிய பலவீனம் அவனது பசி. பசி தாங்க மாடான். பசி வந்துவிட்டால், இடம் பொருள் எதையும் பார்க்க மாட்டான். சாப்பிட ஆரம்பித்து விடுவான்.
இவன் வருவதை அறிந்த துரியோதனன் சூழ்ச்சி செய்கிறான். பாண்டவர்கள் கூடாரம் போல அமைத்து சமையல் செய்து வைத்திருக்க மதியம் பசி நேரம், சல்லியன் சுற்றும் முற்றும் பார்கிறான். சமையல் வாசனை வருகிறது. உடனே அந்த கூடாரத்தை நோக்கி சென்று அங்கு நன்றாக சாப்பிடுகிறான்.
சாப்பிட்டு எழுந்தவுடன், துரியோதனன் சல்லியன் பின்னல் வந்து என்ன மாமா சௌக்கியமா ? என்றான். திரும்பி பார்த்த சல்லியனுக்கு அதிர்ச்சி! துரியோதனா இது உன் கூடாரமா ! இடம் அறியாமல் சோற்றை தின்று விட்டேனே, என்று நொந்து கொண்டான்.
துரியோதனன் இட்ட சோற்றுக்காக சல்லியன் கட்சி மாற வேண்டியதாகி விட்டது. ஆகவே தான் அவசியம் இல்லாமல் அடுத்தவர் வீட்டில் உண்ண கூடாது என்பார்கள்.
போர் நடந்து கொண்டிருக்கிறது, துரியோதனன் பக்கம் இருக்கும் சல்லியனுக்கு போரின்போது மதியம் நேரம் நல்ல பசி, சற்று தொலைவில் நல்ல நெய் வாசனையுடன் சமயல். உடனே அங்கு சென்று வயிறு முட்ட சாப்பிடுகிறான். அப்படி ஒரு உணவு. இதுவரை அம் மாதிரி நெய் மணக்க சாப்பிட்டதில்லை. .சாப்பிட்டு எழுந்தான். கைகளை அலம்பியும் வாசனை போகவில்லை.
இப்படிப்பட்ட சமையல் செய்தவரை பார்த்து பாராட்டி ஏதாவது கொடுக்கவேண்டும் என்று எண்ணி சமையல் கூடம் சென்று பார்க்கிறான். பயங்கர அதிர்ச்சி ! அங்கே முண்டாசு கட்டிக்கொண்டு கையில் கரண்டியுடன் கிருஷ்ணன் நிற்கிறான். கிருஷ்ணா நீயா !சமையல் செய்கிறாய் , பிரமாதம்! நான் இதுவரை இப்படி ஒரு சாப்பாட்டை சாப்பிட்டதில்லை என்றார்.
கிருஷ்ணனும் சல்லியனை பார்த்து வா மாமா வா… எப்போ வந்தாய் ? சாபிட்டயா என்றார். இவ்வளவு பிரமாதமாக சமையல் செய்த உனக்கு ஏதாவது கொண்டுக்க வேண்டுமே ? கிருஷ்ணா! என்ன வேண்டும் கேள் என்றான். கிருஷ்ணன் எனக்கு எதுவும் வேண்டாம் உன் ஆசிர்வாதம் போதும் என்கிறான்.
இல்லை இல்லை ஏதாவது கேள் என வற்புறுத்த, கிருஷ்ணன் புன்முறுவலுடன் , மாமா நீ தேரை ஓட்டும் போது ஒரு சக்கரத்தை பள்ளத்தில் இறக்கி ஒரு நொடியில் அதை மேலே ஏற்றி ஓட்டு வாயே? அதில் நீ தான் கைதேர்ந்தவன். அந்த வித்தயை எனக்கு எப்படி என்று சொல்லிக் கொடுப்பாயா?. உடனே சல்லியன் அதை சொல்லி கொடுக்க கிருஷ்ணன் அதனை கேட்டுக்கொண்டான்.
17 வது நாள் கர்ணன் அர்ஜுனன் யுத்தம் . தேரோட்டியாக சல்லியன் செல்கிறான். அர்ஜுனனின் அம்புகள் சரமாரியாக வருகிறது. கர்ணன் நாகாஸ்த்திரத்தை விட அர்ஜுனனின் தலைக்கு குறி வைக்கிறான். அப்போதுதான் சல்லியனுக்கு தான் செய்த தவறு புரிந்தது. நம்மிடம் கற்ற அந்த வித்தையை கொண்டு அர்ஜுனனை காப்பாற்றி விடு வானே? ஆஹா ! கிருஷ்ணன் சாமர்தயமாக செயல் பட்டு விட்டானே என்று நினைத்து,
கர்ணா ! அர்ஜுனனின் தலைக்கு குறி வைக்காதே வேண்டாம் , மார்புக்கு குறி வை என்றான். ஆனால் அதை சட்டைசெய்யாமல் கர்ணன் அம்பு விட அது அர்ஜுனனின் தலைக்கு அருகில் வந்த போது கிருஷ்ணன் தேரை பள்ளத்தில் இறக்கி ஒரு நொடியில் மேலே எழுப்பினான். அதனால் அம்பு கிரீடம் மீது பட்டு சென்றது. சல்லியன் வியந்து போய் என் கண்ணை நானே குத்திக்கொண்டு விட்டேனே என நினைத்தான்.
மேலும் கர்ணன் தனது பேச்சை கேட்காததால் கோபம் கொண்டு தேரை விட்டு இறங்கி சென்று விட்டான் சல்லியன்.இப்போது கர்ணன் ஒரு கையில் தேரை ஓட்டிக்கொண்டு மறு கையில் அம்பு விடுகிறான். கர்ணனுக்கு தாய் விரோதி தந்தை விரோதி ஆச்சார்யன் விரோதி அதிதி விரோதி மேலும் அவன் பெற்ற சாபத்தின் பயனாக தேர் ஒரு பள்ளத்தில் சிக்கியது. கிருஷ்ணன் , அர்ஜுனா அம்பை விடு என்றான். அர்ஜுனனின் அம்புகள் மழை போல் பொழிந்தன.
கர்ணனின் உடலில் அம்புகள் தெய்க்க, கர்ணன் தேரின் சக்கரத்தின் பக்கத்தில் உடலில் இரத்தம் வழிய உயிர் உள்ள நிலையில் கிடக்கிறான். கிருஷ்ணன், அர்ஜுனா! போதும் சற்று நிறுத்து என்று சொல்லிவிட்டு, தேரை விட்டு இறங்கி ஒரு வயதான அந்தணர் போல வேடம் இட்டு கர்ணனை நோக்கி வருகிறார்.
கர்ணா! உன்னிடம் யாசகம் பெறலாம் என வந்தேனே , நீ இப்படி கிடக்கிறாயே என சொல்ல கர்ணன் அந்தனரை பார்த்து இப்போது என்னிடம் என்ன இருக்கிறதோ அதை கேளுங்கள் தருகிறேன் என்றான். அந்தணர், நான் வாழ்வில் ஒரு புண்ணியமும் செய்ததில்லை எனவே உன்னிடம் உள்ள புண்ணியங்களை எனக்கு கொடுப்பயா என்றார்.
உடனே கர்ணன் தன் மார்பில் வழிந்த இரத்தத்தை எடுத்து அந்தணர் கையில் யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன், என அனைத்து புண்ணியங்களை உங்களுக்கு தாரை வார்த்து கொடுக்கிறேன் என்று கொடுத்தான். கர்ணனின் இரத்தம் கிருஷ்ணனின் கையில் பட்டதும், கிருஷனுக்கே , கர்ணனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என தோன்றியது. அது தான் கர்ணனின் சிறப்பு.
கிருஷ்ணர் உனக்கு என்ன வேண்டும் கேள் என்றதும் கர்ணன் புரிந்து கொண்டான் வந்திருப்பது அந்தணர் வடிவில் சாக்ஷாத் நாராயண் என்று. எனக்கு என்ன வேண்டும் ? குந்திக்கு மகனாக பிறந்தேன், சூரியனுக்கு மகனாகப் பிறந்தேன், பரசுராமனிடம் கல்வி பயின்று, இன்று துரியோதனனுக்குக்காக உயிரை விடப்போகிறேன், உயிர் பிரியும் தருணத்தில் பகவானை பார்க்கிறேன், பகவானே எப் பிறவியிலும் என்னை நாடி வருவோர்க்கு இல்லை என்று சொல்லாத மனம் தந்திடு என்றான்.
உடனே கர்ணனின் முன் கிருஷ்ணன் சங்கு சக்கரத்துடன் விஸ்வரரூபம் எடுத்து நிற்கிறான். இது தான் கிருஷ்ணன் எடுத்த 4 வது விஸ்வரூபம். அதை கண்ட கர்ணன் ஆனந்த வயப்பட்டு, ஹே! கிருஷ்ணா, முகுந்தா, மாதவா, என கூறி
நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண
என பாடிக்கொண்டே கர்ணன் முக்தி அடைகிறான், இறைவன் திருவடிகளை சேர்கிறான். அவனது பிறவி நிறைவு பெறுகிறது.
மூன்று முறை விஸ்வரூபம் எடுத்து பலன் இல்லாமல் தோற்று போன நிலையில், ஆண்டவன் 4 வது விஸ்வரூபம் மூலம் பலனை பெற்று வெற்றி பெறுகிறான்.
கிருஷ்ண! கிருஷ்ண! கிருஷ்ணா!!
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து
………. ஸ்ரீ