கிருஷ்ணரின் முதல் விஸ்வரூபம்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது:

கிருஷ்ணர் எடுத்த முதல் விஸ்வரூபம் :

கிருஷ்ணனின் அவதார சூக்ஷமத்தினை புரிந்து கொள்வது கஷ்டம் தான்.
கிருஷ்ணாவதார பெருமையினை கூறுகிறது மகா பாரதம். கிருஷ்ணன் தனது அவதாரத்தில் 4 முறை
விஸ்வருபத்தினை காண்பித்தான். அதில் எத்தனையில் வெற்றிகொண்டான் என்பதை பார்ப்போம்.
இராமாயணத்தில் இராமர் விஸ்வரூபம் எடுக்கவில்லை, மனிதனாகவே இருந்தார், ஆஞ்சநேயர் விஸ்வரூபம் எடுத்தார்.
பாரதத்தில் கண்ணனே விஸ்வரூபம் எடுக்கிறார்.

அஸ்தினாப்புரத்தை(டெல்லி) விட்டு வெகு தொலைவில் விராடம் வந்தனர் பாண்டவர்கள். விராடம் என்பது தற்போதைய காங்கேயம் என்ற ஊர். சகாதேவன் அங்கு பசுக்களை வளர்த்து வந்தார். அதனால் தான் இன்றும் காங்கேய காளை பிரபலம். விராட பருவம் முடிந்தது.

நாட்டை திரும்ப பெறவேண்டி விராட
ராஜன் தலைமையில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் கிருஷ்ணரும் அழைக்கப்பட்டார். போரிட மனதளவில் முடிவு செய்த கிருஷ்ணர், பாண்டவர்களை பார்த்து உங்களுக்கு என் மேல் கோவம் இருக்கலாம். எனக்கு போரில் விருப்பம் இல்லை, ஆனாலும் உங்கள் ஒவோருவரின் அபிப்ராயம் என்ன என கேட்கிறார்.

தர்மர் : தருமரிடம் கிருஷ்ணர் கேட்க, கிருஷ்ணா .. என் மனம் போரை விரும்பவில்லை. நாடு போனாலும் போகட்டும் இருக்க வீடு இருந்தால் போதும் சண்டை வேண்டாம் என்றார்.

பீமன்: அடுத்து பீமனை கேட்க, ஹே ! கிருஷ்ணா என ஆவேசத்துடன் கதையை கையில் எடுத்து , போரில் துரியோதனனை வீழ்த்துவேன் என்று ஆவேசத்துடன் சொன்னார்.

அர்ஜுனன் : கிருஷ்ணன் கேட்டவுடன் வில்லினை டங் என அடித்து எழுந்தவன் துரியோதனனை அழிக்கவே நான் அம்பு எடுத்திருக்கிறேன். போர் வேண்டாம் என சொல்லாதே கிருஷ்ணா…..என்றான்.

நகுலன்: கிருஷ்ணன் நகுலனை கேட்க தன்னிடமிருந்த வாளை உருவி, வாளால் அத்துணை பேரயும் வீழ்த்துவேன் என ஆவேசம் கொள்கிறான்.

சகாதேவன் : கடைசியாக சகாதேவா !உன் அபிப்ராயம் என்ன என்று கேட்டான் கிருஷ்ணன். அவனோ ஒரு ஞானி போல அமைதியாக இருந்தான்.மேலும் கிருஷ்ணா….. நீ தூது போனால் என்ன? போரிட்டால் என்ன? திரவ்பதியின் கூந்தல் முடிந்தால் என்ன? எனக்கு தெரியுமா பாரத போர் முடிவு? எல்லாவற்றிற்கும் நீயே காரணம் கிருஷ்ணா,
என்னை ஏன் கேட்கிறாய் என்றான்.

தத்துவம் பேசாமல் மேலே சொல் என கேட்க, கிருஷ்ணா இப்போது சொல்லட்டுமா போர் வாரமல் இருக்க வேண்டும் அவ்வளவு தானே…. சொல்கிறேன் கேள், அர்ச்சுனனை கொல்ல வேண்டும், கர்ணனை அரசாள சொல்லவேண்டும் திரௌபதி தலையை மொட்டை
அடிக்க வேண்டும், அதுமட்டும் இல்லை உன்னை கட்டி போடவேண்டும் என்றான்.

கிருஷ்ணன் சிரித்துகொண்டே, எங்கே என்னை கட்ட முடியுமா என்றார்.. சகாதேவன் கிருஷ்ணனை பார்த்து கிருஷ்ணா… என்னால் அர்ஜுனனை கொல்ல முடியாது, கர்ணனை அரசாள வைக்க முடியாது, திரௌபதி தலையை மொட்டை அடிக்க முடியாது,. ஆனால் உன்னை என்னால் கட்டி போட முடியும் என்றார். எங்கே என்னை கட்டு பார்க்கலாம் என்று கிருஷ்ணன் கூற
இங்குதான் ஆண்டவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஏற்பட்டது சவால்.

உடனே கிருஷ்ணன் ஆய வடிவம் பதினாயிரம் கொண்டு விஸ்வரூபம் எடுத்தான். இது தான் முதல் விஸ்வரூபம். சகாதேவன்
கிருஷ்ணா, இப்பவும் என்னால் உன்னை கட்ட முடியும் என கூறி தனது மனதினையே கருவறையாக்கி பக்தி என்ற பாச கயிற்றால் கிருஷ்ணனின் பாதங்களை கட்டினான்.

கிருஷ்ணர் இந்த பக்தியில் கட்டுண்டு நின்றார். சகாதேவா என்னை விடுவி என சொல்ல அப்போது ஒரு சத்தியம் செய்து கொடு உன்னை விடுவிக்கிறேன் என்ன சொல்ல என்ன சத்யம் அது என்று கேட்டார் கிருஷ்ணர்.

சகாதேவன் சொன்னான் பாரத போரில் நீ எங்கள் பக்கம் நின்று எங்களை காப்பேன் என சத்யம் செய் பிறகு உன்னை விடுவிக்கிறேன் என்றான்.
இந்த இடம் தான் மனிதன் ஆண்டவனை வெற்றி கொண்ட இடம். ஆகவே கிருஷ்ணன் தனது முதல் விஸ்வரூபத்தில் தோல்வியே
அடைந்தான்.

ஆண்டாள் கூற்று போல “கூடாரை வெல்வான் “. அதாவது ஆண்டவனிடம் கூடாதவரை எளிதில் வெல்வான். ஆனால் ஆண்டவனிடம் கூடியவர் முன் தோற்று நிற்பான்.

இப்படியாக முதல் விஸ்வரூபம் பக்தியின் முன் தோற்றது. இதிலிருந்து இறைவன் நாம் செலுத்தும் பக்திக்கு இறங்கி வருபவன் என்று தெரிகிறது.

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: