கீதையின் சிறப்பு

இன்று நாம் காணப்போவது பகவத் கீதையின் சிறப்புகள் :

ஸ்ரீமத்பகவத்கீதை வாழ்க்கைக்கான பாடம். இது
சாதாரண பாமரனை பண்புள்ளவனாக்கவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் ஆக்குகிறது.

பகவத்கீதையின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை

1.சந்நியாசம் மற்றும் யோகம் என்ற இரண்டு பாதைகளையும் சமரசப்படுத்தி இரண்டின் வழியாகவும் இறைவனை அடையலாம் என்று போதிக்கிறது.

2.துவைதம்,விசிஷ்டாத்வைதம்,அத்வைதம் என்ற மூன்று தத்துவங்களையும் போதிக்கிறது

3.ஆத்ம தத்துவத்தைப்பற்றி விரிவாக கூறுகிறது

4.தியானம் செய்ய செயல்முறை விளக்கங்களை கூறுகிறது.

5.இல்லறத்தார்கள் தினசரி கடமைகளை செய்துகொண்டே இறைவனை அடையும் வழியைப்போதிக்கிறது.

6.சந்நியாசிகள் எப்படி வாழவேண்டும் என்று போதிக்கிறது.

7.எது ஞானம் எது அஞ்ஞானம் என்பதை விளக்குகிறது.

8.பல்வேறு வழிபாட்டு முறைகளைப்பற்றி போதிக்கிறது.

9. மூன்று குணம்கொண்ட மனிதர்களையும் அவர்கள் இயல்புகளைப்பற்றியும் போதிக்கிறது

10.பிரபஞ்சத்தின் தோன்றத்தைப்பற்றிய தத்துவங்களைக்கூறுகிறது

12. தன்னை சரணடைவதன் மூலம் முக்திபெறலாம் என்று கூறி புதிய பாதைய காட்டுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இன்னும் கணங்கிலடங்காத கருத்துக்கள் பகவத்கீதையில் அடங்கியிருப்பதால்தான் பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தபிறகும் இன்றும் புதுமையாக காட்சியளிக்கிறது.

பகவத்கீதை என்பது ஒரு மதநம்பிக்கை கொண்டோருக்கானது அல்ல.ஸ்ரீகிருஷ்ணரை இஷ்ட தெய்வமாக ஏற்று வழிபடுபவர்களும் இதை பின்பற்றலாம், சைவர்கள்,சாக்தர்கள்,வேதாந்தம் இன்னும் பிறமதங்களில் நம்பிக்கை வைத்திருப்பவர்களும் இதை பின்பற்றலாம்.

ஒரு மதத்தை போற்றுவதும்,பிற மதங்களை இகழ்வதுமான கருத்துக்களை பகவத்கீதையில் எங்கு தேடினாலும் காண முடியாது.

சொல்லில் அடங்கா சிறப்புகளை கொண்ட இந்த பகவத் கீதையை அனைவரும் படித்து அதன் படி வாழ்வோம்..

லோகா சமஸ்தா சுகினோ பவந்து…… !
………. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: