குருவின் மகிமை

இன்று நாம் தெரிந்துக் கொள்ள
போவது:
” குரு மகிமை”

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

குருவே பிரம்மா வாகவும் விஷ்ணு வாகாவும் மகேஸ்வரனாகவும் சாக்ஷாத் பரப்பிரம்மாவாகவும் விளங்கும் குருவை வணங்குகிறேன்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், நம்மைப் பெற்ற தாய் தந்தையருக்கு அடுத்த நிலையில் வைத்துப் பூஜிக்கத் தகுந்தவர்,

நம்மைப் பெறாமல் பெற்று, ஞானாசானாக நல்லறிவு புகட்டி, இறைவனை அடையும் பாதையை நமக்குக் காட்டிக் கொடுத்து, நம் வாழ்வின் பயனை அடையச் செய்யும் சத்குருநாதனே ஆவார். குருவருள் இல்லையேல் திருவருள் கிடைப்பது கடினம்.

வாழ்க்கையில் முன்னேறணும், நற்கதியை அடையணும்னா அதுக்கு குரு கடாட்சம் வேணும். கடவுள்கிட்ட, ‘இவர்களுக்கு நற்கதியை கொடு’னு recommend பண்றவர் சாட்சாத் குருதான். குருவை நாம தெய்வமாதான் பார்க்கணும். நமக்கு அறிவைக் கொடுப்பது நம் ஆசிரியர்கள், ஞானத்தைக் கொடுப்பது குருதான். பல சமயங்களில் குருவே ஆசிரியர்களாகவும் விளங்குவார்கள்” என்றார், ‘குருமகிமை’ என்ற தம்

குருவே சிவன், குருவே தெய்வம், குருவே பந்தம், குருவே உயிர், குருவிற்கு நிகராக எதுவுமில்லை. குரு சச்சிதானந்த ரூபமானவர், பரிபூரணமாக திகழ்பவர், எங்கும் இருப்பவர், குருவின் பாதச் சுவடுகளை வணங்கினாலே கடவுளின் பரிபூரண ஆசியைப் பெறலாம். குருவின் பாதத் தீர்த்தமே கங்கை. மொத்தத்தில் குருவானவர் மனிதனை பாவங்களில் இருந்து மீட்டு நல்வழிப் படுத்தி அவன் மனதில் ஞான ஒளியை ஏற்றுபவர்” என்ற எண்ணமுடைய சீடன் விரைவில் ஞானம் பெறுகிறான்.

குரு சில சமயங்களில் சீடனுக்கு எதுவும் சொல்லித்தராமல் தன்னுடைய அருள் மூலமே அவனுக்கு ஞானத்தை அளிப்பார். இவ்வாறு செய்யும் முறையை தீட்சை என்பர். தீட்சையில் ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, பாவனா தீட்சை, வாக்கு தீட்சை, யோக தீட்சை, நூல் தீட்சை என்று பல வகை உண்டு.

ஸ்பரிச தீட்சை : குரு தனது திருக்கரத்தினால் சீடரைத் தொட்டு ஆசீர்வதித்து அவனை ஞானமடையச் செய்தல்.

நயன தீட்சை : குரு தன் பார்வையாலேயே சீடனுக்கு அருள் செய்தல்.

பாவனா தீட்சை : குரு தன்னைப் போன்றே தன் சீடர்களும் ஞானம் பெற வேண்டுமென்று ஒருமுகமாக எண்ணுவதன் மூலமே சீடனுக்கு ஞானத்தை அருள்வது.

யோக தீட்சை : குரு தன் யோகத்தின் மூலம் சீடனுக்கு ஞானத்தைக் கொடுப்பது. வாக்கு தீட்சை : குரு, ஞானிகள் அருளிய வேத வேதாந்த கருத்துகளையும், தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும், அருள் வேட்கையோடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, அவர்களை ஞானம் அடையச் செய்தல்.

நூல் தீட்சை : ஞானிகள் அருளிய வேத வேதாந்தங்களையும் அதன் மூலம் அவர்கள் அனுபவித்த மெய்ஞான அனுபவங்களையும் அவற்றைப் பின்பற்றுவதால் ஏற்படும் நலன்களையும் சீடர்களுக்கு வழிகாட்டும் நூலாக அருள்வது நூல் தீட்சையாகும்.

குரு + வேதம் = பூரண வாழ்க்கை

குரு – வேதம் = நரக வாழ்க்கை

வேதம் – குரு = துக்க வாழ்க்கை

– குரு – வேதம் = மிருக வாழ்க்கை

குருவால் சொல்லப்படாத வேதமும் பாழும் கிணறு…

வேதத்தை சொல்லாத குருவும் பாழும் கிணறு…

வேதத்தை சொல்லும் குருவை அடைந்தவனே உண்மையில் பணக்காரன்! பாக்கியவானும்கூட!!

வேதத்தின் பேச்சு ஒன்றே நம்பத்தகுந்தது. அது இந்த உலகைப் படைத்த இறைவனிடமிருந்து வெளிப்பட்டது.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே

“குருவே சரணம்”

லோகா சமஸ்தா சுகினோ
பவந்து ……
…….. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: