இன்று நாம் தெரிந்துகொள்ள போவது :
சங்கல்பம் மற்றும்
அர்ச்சனை :
சங்கல்பம் என்பது வாழ்க்கையில் நாம் செய்ய போகும் செயலை த்ருட மாக எண்ணி கொள்வதாகும். இது உறுதி அல்லது குறிக்கோள் ஆகும். இதை திட சங்கல்பம் என கூறுவர். செயல் தன்னால் செய்ய படுவதாகவோ, இல்லை மற்றவர்கள் செய்விக்க படுவதாகவோ இருக்கலாம்
இந்த செயலுக்காக இந்த வருஷம் , மாதம், அயனம் திதி வாரம், நக்ஷ்த்திரம் சொல்லி உறுதி எடுத்துக்கொள்வது ஆகும்.
நாம் எந்த செயலை செய்தலும் அது ஈஸ்வரன் சங்கல்பமாக இருக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். அதனால் தான் சங்கல்பம் ஆரம்பத்தில் பரமேஸ்வர ப்ரித்யர்தம் என்று ஆரம்பித்து, செயல் முடிந்தவுடன் நாராயணாயேதி சமர்பயாமி என்று நாராயணனுக்கு சமர்பிக்கிறறோம்.
அர்ச்சனை செய்வதற்கு முன்பு தட்டை நீட்டி தொட்டுக் கும்பிட சொல்வது ஏன் ??
அர்ச்சனை என்றால் என்ன?*
அர்ச்சனை என்றால் அர்ச்சிப்பது எனப் பொருள்.
கோயில் சென்று ஒருவர் தனது கோத்திரம் பெயர் நட்சத்திரத்தை கூறி சங்கல்பம் செய்து இறைவனை அர்ச்சனை செய்து ஆண்டவன் நாமங்களை சொல்லி வழிபட்டு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
ஒருவருக்கு இந்த இடத்தில், இந்தக் காலத்தில், இப்படி ஒரு வேண்டுதலை முன்னிட்டு இன்ன பூஜை செய்யப்படுகிறது என்று சொல்லி பூஜை செய்வதே சங்கல்பமாகும். இப்படியான சங்கல்பத்தின் பொருட்டே அர்ச்சனை தட்டை தொட்டுக் கும்பிடச் சொல்வார்கள். அர்ச்சனை செய்வது இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இருக்கலாம்.
அல்லது வாழ்வில் இன்னும் மேம்பட இறைவனை வேண்டுவதற்காக இருக்கலாம்.இல்லையென்றால்
துன்பங்களை தாங்கும் மன உறுதி கேட்கலாம். கோயிலில் அர்ச்சனை செய்வது வீட்டில் பூசை செய்வதை காட்டிலும் சக்திவாய்ந்தது.
அங்கிருக்கும் தெய்வம் மந்திர உச்சாடனாங்களாலும் ,பூஜை வழிபாடுகளாலும் மிகவும் சக்தி பெற்றதாக திகழ்கிறது.
ஆலயங்களில் பக்தர்கள் தனித்தனியாக அர்ச்சனை செய்வது காம்ய பூஜை ஆகும். அதாவது நாம் ஒன்றை வேண்டிக் கொண்டு நம்முடைய பிரார்த்தனையைக் கடவுளிடம் சமர்ப்பிப்பது காம்ய பூஜை.
சுவாமியின் பெயரில் அர்ச்சனை செய்தல் கூடாது.
தாங்கள் தனியாக ஆலயத்திற்குச் சென்று வழிபட்டாலும் கூட்டத்துடன் சேர்ந்து வழிபட்டாலும் இறைவனின் அருள் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மையே செய்யும்.
அதன் பொருட்டே ஆலயங்களில் அர்ச்சகர் பெருமக்களால் ஆகம முறைப்படி இன்றளவும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
அவர்கள் அனுதினமும் சங்கல்பம் செய்து கொண்டு பூஜைகளைத் தொடங்குவார்கள்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அர்ச்சனை செய்ய விரும்பினால் தட்டிலுள்ள புஷ்பத்தையோ, குங்குமத்தையோ அவர்களின் பெயர், நட்சத்திரத்தைக் கூறி தொடச் சொல்வது மரபு.
*இந்தச் செயல் ஒரு ஆத்ம தொடர்பை ஏற்படுத்தும் அற்புதமான செயல்பாடாக கருதப்படுகிறது..
நாம் நமது சாஸ்திரம் தர்மங்களை பின்பற்றி செயல் படுத்தி அதனை போற்றி வளர்ப்போமாக !
லோகா சமஸ்தா சுகினோ
பவந்து …. ………
…….. ஸ்ரீ