நாம் இன்று அறிந்து கொள்ளபோவது :
” சனீஸ்வரர் பகவான்”
நவக்கிரகங்களில் முக்கியமானவர் “சனி பகவான்”.
சனி பகவான் சூரிய தேவன், சாய தேவி தம்பதிகளுக்கு பிறந்தவர்.
இவரது வாகனம் காகம் , இவரது கால் சிறிது ஊனம். அதனால் இவர் சற்று மெதுவாகவே செல்லக்கூடிய வர்.
நவகிரகங்களில் சுக்கிரனுக்கு அடுத்தபடியாக வருபவர் தான் சனி பகவான். இவர் வாழ்க்கையில் உள்ள இன்பம் மற்றும் துன்பங்களை அவரவரின் கர்ம வினைக்கு ஏற்ப வழங்கக்கூடியவர்.
சனி பகவான் நமக்கு எவ்வளவு துன்பம் அளிக்கிறாரோ அந்த அளவிற்கு இன்பங்களையும் கொடுக்கக்கூடியவர்.
சனி பகவான் உலகிலுள்ள எல்லா வகை துன்பங்களையும் அனுபவிக்க வைத்து, நம்மை சிறந்த அனுபவசாலியாகவும், துன்பப்படுவோருக்கு சிறந்த வழிகாட்டியாகவும் மாற்றி எக்காலத்திலும் நம் பெயரை நிலைநாட்டக் கூடியவர்.
அனுபவ கல்வியை அளித்து, உலகம் என்னவென்றும், உறவுகள், நண்பர்கள் யார் யார் எனவும் தெளிவு படுத்தும் ஆற்றலை கொண்டவர் சனி பகவான்.
சனி பகவானுக்குரிய மலர் கருங்குவளை
சனி பகவானுக்குரிய தானியம் எள்
சனி பகவானின் வாகனம் காகம்
சனி பகவானின் நவரத்தினம் நீலக்கல்
சனி பகவானுக்குரிய ஆதிக்க எண் 8
சனி பகவானின் அதிதேவதை எமன், ஆஞ்சநேயர்
இவரது இருப்பிடம் சனிலோகம். கிரகம் சனி கோள்.
இவரது ஆயுதம் தண்டாயுதம். துனைவியின் பெயர் மந்தா தேவி.
சகோதரர்/ சகோதரி தபதி,சாவர்ணி,
மனு ஆகியோர் ஆவர்.
இவரது மறு பெயர் சாய புத்ரன்..
ஏழரை சனி :
நம் ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசியே ஜன்ம ராசி என்பர். சனி ஒவ்வொரு ராசியிலும் 2 1/2 வருடம் தங்கியிருப்பார்.
முதல் இரண்டரை ஆண்டு காலம் விரய சனி என்று கூறுவர்.
அடுத்த இரண்டரை ஆண்டு ஜன்ம சனி என்று கூறுவர்.
கடைசி இரண்டரை ஆண்டு பாத சனி
என்பர்.
எல்லாருடைய வாழ்க்கையிலும் 30 வருடத்திற்கு ஒரு முறை ஏழரை சனி வரும். முதல் சுற்று மங்கு சனி இரண்டாம் சுற்று பொங்கு சனி மூன்றாம் சுற்று, கடைசிசனி என்று சொல்வர்.
சனியின் பிடித்த நிறம் கருப்பு. வாகனம் காக்கை நிறம் கருப்பு,
கருப்பு துணியில் கருப்பு எள் வைத்து கட்டி விளக்கு போடுவது விசேஷம்.
சனிக்கிழமைகளில் விளக்கு போடுதல், ஊனமுற்றோர்க்கு வஸ்திர தானம் செய்தால் நல்லது.
சனியால் பாதிக்கப்படாதவர் எவரும் இல்லை.
சிவ பெருமான் சனி தன்னை பிடிக்க முடியாது என நினைத்தார். சனி பகவான் வருவதை கண்டு தன்னை பிடிக்காமல் இருக்க பரமசிவன் குகைக்குள் சென்று 7 1/2 வருடம் த்யானம் செய்கிறார்.
ஏழரை வருடம் முடிந்து குகையை விட்டு வெளியில் வரும்போது வெளியில் சனி பகவான் உட்கார்ந்து இருப்பதை பார்த்த சிவன், உன்னால் என்னை பிடிக்க முடியவில்லை பார்த்தாயா என கேட்க, சனி பகவான் சிரித்துகொண்டே நான் உங்களை பிடித்ததால் தான் நீங்கள் உங்கள் மனைவி உமா தேவியை விட்டு பிரிந்து ஏழரை ஆண்டு தனியாக இருந்தீர்கள் என கூற, சனியின் பிடியிலிருந்து சிவனும் தப்பவில்லை என்பது தெரிகிறது. சனி பகவான் சிவனையே பிடித்ததால் சனீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
பரிகாரங்கள் :
சனிக்கிழமை தோறும் கருப்பு எள் விளக்கு போடவேண்டும். காக்கைக்கு சாதம் வைத்தல் மிகவும் நல்லது.
ஊன முற்றோர் மற்றும் அனாதை இல்லங்களுக்கு சென்று உணவு மற்றும் வஸ்திர தானம் செய்யலாம்.
அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்லவும்.
சனி ஸ்தோத்திரம்:
நீலாஞ்சன ஸ மாபாசம்
ரவிபுத்ரம் யாமகிராஜ்ஜம்
சாயா மார்த்தாண்ட சம்பூதம்
தன் ந மாமி சனைஸ்வரம்.
சனி காயத்ரி:
காகத்வாஜய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன் நோ மந்த ப்ரசோதயாத் !
இந்த மந்திரங்களை தினமும் 11 முறை.ஜபித்து , சனிக்கிழமை சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், வாழ்கையில் நன்மைகள் நடப்பது நிச்சயம்.
லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …. ……
…….ஸ்ரீ