ஆன்மீக சாரலில் சிந்தனைகள் :
#1
கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ
அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும்.அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே“ என்றார் அப்பர்.இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை “அவனருளாலேஅவன் தாள் வணங்கி“ என்கிறார் மாணிக்கவாசகர். (கிருபானந்த வாரியார்)
#2
கடவைள நோக்கி மனதை திருப்புங்கள். அப்போது மனம் இயற்கையாகவே உலக இன்பத்தை நாடுவதை விட்டு விடும்.
பிறகு உங்கள் மனதின் மேல் நீங்கள் ஆதிக்கம் செலுத்துவது எளிதாகும்.
…….. சாய் பாபா
#3
ஏழைகள் வயிறு எரியச் செய்வது பாவம். பசித்தோர் முகத்தை பாராதிருப்பது பாவம்.
கோள் சொல்லி குடும்பம் கலைப்பது பாவம். குருவை வணங்க கூசி நிற்பது பாவம். (சுவாமி வள்ளலார்)
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..