ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு வலஞ்சுழிநாதர் திருக்கோயில (திருவலஞ்சுழி)
சிவஸ்தலம் பெயர் | திருவலஞ்சுழி |
இறைவன் பெயர் | கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர், கபர்த்தீசர், கற்பகநாதர் |
இறைவி பெயர் | பெரியநாயகி, பிருகந்நாயகி |
பதிகம் | திருநாவுக்கரசர் – 2 திருஞானசம்பந்தர் – 3 |
எப்படிப் போவது | கும்பகோணத்தில் இருந்து 6 கி.மி. தொலைவில் சுவாமிமலைக்கு அருகே இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர், பாபநாசம், சுந்தரப் பெருமாள் கோயில் முதலிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது. |
ஆலய முகவரி | அருள்மிகு வலஞ்சுழிநாதர் திருக்கோயில் திருவலஞ்சுழி சுவாமிமிலை அருகில் கும்பகோணம் வட்டம் தஞ்சை மாவட்டம் PIN – 612302 இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ