ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் (திருகச்சிமேற்றளி காஞ்சி)
சிவஸ்தலம் பெயர் | திருக்கச்சூர் ஆலக்கோவில் |
இறைவன் பெயர் | கச்சபேஸ்வரர், விருந்திட்ட ஈஸ்வரர் |
இறைவி பெயர் | அஞ்சனாட்சி, கன்னி உமையாள் |
பதிகம் | சுந்தரர் – 1 |
எப்படிப் போவது | சென்னை எழும்பூர் – செங்கல்பட்டு ரயில் மார்க்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னை – செங்கல்பட்டு தேசீய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோவில் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் திரும்பி ரயில்வே கேட் தாண்டி சுமாராக 1 கி.மி. தூரம் சென்ற பின் வலதுபுறம் பிரியும் சாலையில் மேலும் 1 கி.மி. தூரம் சென்றால் திருக்கச்சூர் ஆலயத்தை அடையலாம். ஊரின் நடுவே கோவில் உள்ளது. சிங்கப்பெருமாள்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ மூலம் செல்வது நல்லது. இல்லாவிடில் சுமார் 2 கி.மி. தொலைவு நடந்து செல்ல வேண்டும். |
ஆலய முகவரி | அருள்மிகு விருந்திட்ட ஈஸ்வரர் திருக்கோவில் திருக்கச்சூர் அஞ்சல் வழி சிங்கபெருமாள் கோவில் செங்கல்பட்டு வட்டம் காஞ்சீபுரம் மாவட்டம் PIN – 603204 இவ்வாலயம் காலை 8 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து…
……..ஸ்ரீ