ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் (திருக்கடுவாய்கரைப்புத்தூர்)
சிவஸ்தலம் பெயர் | திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (தற்போது ஆண்டாங்கோவில் என்று வழங்குகிறது) |
இறைவன் பெயர் | சொர்ணபுரீசுவரர் |
இறைவி பெயர் | சிவாம்பிகை, சொர்ணாம்பிகை |
பதிகம் | திருநாவுக்கரசர் – 1 |
எப்படிப் போவது | கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் வழியில் வலங்கைமானில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவு. கும்பகோணத்தில் இருந்து நரசிங்கமங்கலம் செல்லும் நகரப் பேருந்து எண் A20 கோவில் வழியாகச் செல்கிறது. தஞ்சாவூரில் இருந்து வலங்கைமான் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்துகள் ஆண்டான்கோவில் வழியாகச் செல்கின்றன். ஆண்டான்கோவில் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மி. நடந்தால் சொர்ணபுரீசுவரர் ஆலயத்தை அடையலாம். |
ஆலய முகவரி | அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் ஆண்டான்கோவில் ஆண்டான்கோவில் அஞ்சல் வலங்கைமான் S.O. திருவாரூர் மாவட்டம் PIN – 612804இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ