சிவாலய மகிமை #65

ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது சிவாலய மகிமை இன்றைய சிவ ஸ்தலம்

அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோயில் (திருக்கண்ணார் கோயில்)

 

சிவஸ்தலம் பெயர் திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி)
இறைவன் பெயர் கண்ணாயிரநாதர்
இறைவி பெயர் முருகுவளர்கோதை
பதிகம் திருஞானசம்பந்தர் – 1
எப்படிப் போவது சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன்கோவில் என்ற பாடல் பெற்ற தலத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 5 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் சிவஸ்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவில் – மாயவரம் சாலையில் பாகசாலை என்ற ஊர் வரும். அங்கிருந்து பிரியும் சாலையில் 2 கி.மி. தொலைவில் திருக்கண்ணார்கோவில் உள்ளது. சிதம்பரம் – மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் உள்ள கதிராமங்கலம் என்னும் இடத்தில் இருந்து 5 கி. மி. சென்றாலும் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு கண்ணாயிரநாதர் திருக்கோவில்
குறுமானக்குடி
கொண்டத்தூர் அஞ்சல்
தரங்கம்பாடி வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம்
PIN – 609117இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

……..ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: