செழிப்பை கொடுக்கும் ஆலய பூஜைகள் :
ஆற்றரு நோய்மிக்கு,
அவனிமழை இன்றிப்
போற்ற அருமன்னரும்
போர்வலிகுன்றுவர்
கூற்று உதைத்தான்
திருக்கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில்தானே
( திருமந்திரம் )
சிவாலயங்களில் பூசைகள் குறைந்தால் நோய் மிகும், மழை குறையும், மன்னர் கெடுவர் என்கிறார் திருமூலர். கொள்திருக்கோயிலை முன்னோர்கள் பக்தியுடன் கட்டினர். அதற்கு பலகோடி சொத்துக்களையும் தந்தனர். ஆனால் அந்தச் சொத்துகளை இன்றைய மக்கள் அபகரித்து வாழ்கிறார்கள். கோயில்களை வியாபார நோக்கில் செயல்படும் மையங்களாக மாற்றி வருகிறார்கள். அதனால்தான் வளம் குன்றி மழையை இழந்தோம்; துயரங்களை அனுபவிக்கிறோம்.
அதேபோல மனிதன் இயற்கையை கடவுளாக வணங்கியவரை அதுவும் இயல்பாக உதவியது. இன்று இயற்கையை அழித்து, மாசுபடுத்துவதால் இயற்கை பேரிடர்கள் உருவாகின்றன. எனவே ஆலய பூசைகளை முறைப்படி செய்வோம்; மழை பெறுவோம்!
…….ஸ்ரீ
……………………………………………….
நேற்றைய கேள்விக்கான பதில்
- ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி 2. ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் 3. மச்சாவதாரம் 4. மதுரை. 5.காஸ்யபர், அத்ரி, பரத்வாஜர்,விஸ்வாமித்திரர்,கௌதமர், ஜமதக்னி, வசிஷ்டர். 6.திருக்கடையூர் 7. தன்வந்திரி 8.முருகன் 9. கன்யா 10. 14 வது 11. தக்ஷிணாயானம், உத்தராயணம் 12. மார்கழி 13. நரசிம்மர் 14. ஸ்ரீ பெரும்பத்தூர் 15. 15 வரிகள்.
…………………………………………………..