ஞானம் என்பது எது ?

ஞானம் என்றால் என்ன?

பரிபூரண அறிவே ஞானம். பூரணம் என்றால் முழுமை. முற்றும் அறிந்தவனே – உணர்ந்தவனே பரிபூரணன். ஞானி.
சந்தேகமின்றி தெளிந்தவனே எல்லாம் தெரிந்தவன் ஆவான். அவனே எல்லோருக்கும் தெரிவிப்பான். அவனே ஞானி.

விவேக புத்தி: ஒன்றின் பொருளைப் பிரித்து அறிந்து கொள்ளும் தன்மையே அறிவே. எடுத்துக்காட்டாக, இது தர்மம் – இது அதர்மம், இது உண்மை – இது பொய், இது நல்லது -இது கெட்டது, இது நன்மை – இது இன்பம், இது அழிவற்றது – இது நிலையானது என்று அறிவினால் பிரித்துப் பார்த்து தெரிந்து கொள்வதே ஞானம் ஆகும். இதனை விவேக புத்தி என்பர்.

2. வினிச்சய புத்தி: ஒன்றை நன்கு பிரித்துப் பார்க்கும் விவேக புத்தி இருந்தும், அந்த அறிவில் உறுதி இல்லை எனில் அதற்கு வினிர்ச்சய புத்தி என்பர்.

3. விசுத்த புத்தி: மனத்தூய்மை, கபடமற்ற குணம் மற்றவர்களை ஏமாற்றாத மனம் உடையவர்களை விசுத்த புத்தி உடையவர்கள் என்பர்.

4. விசால புத்தி: பரந்த மனதை உடையவர்கள், பிறர் பொருளில் ஆசை கொள்ளாதிருத்தல்; அதே நேரத்தில் நமது பொருளை பிறருடன் பகிர்ந்து கொள்வது விசால புத்தி (பரந்த மனப்பான்மை) என்பர்.

5. நிச்சல புத்தி: ஒன்றிலேயே நமது மனதை பொருத்திப் பழகும் தன்மையை உறுதியான புத்தி அல்லது நிச்சல புத்தி என்பர்.

6. திட புத்தி: துன்பங்கள், துயரங்கள், நட்டங்கள் வரும் போது அதனை தாங்கிக் கொள்ளும் உறுதியான மனம் தேவை. அத்தகைய மனதிற்கு திட புத்தி என்பர்.

7. ஜாக்கிரத் புத்தி: விழிப்புணர்வுடன் கூடியதாக இருக்கும் மனம் அல்லது அறிவு அல்லது புத்தியை விழிப்புநிலை புத்தி என்பர்.

யோகத்தை அடையும் வழிகள்:

முதலில் மனதை சத்துவ குணத்தில் மனதை நிலை நிறுத்த வேண்டும். பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்திரத்தில், தியானம் எனும் தொடர் பயிற்சியாலும், வைராக்கியத்தாலும் மட்டுமே மனதை நம் கட்டுக்குள் வரமுடியும் என வழியுறுத்துகிறார்.

வைராக்கியம் எனில் உலக இன்பங்களில் ஆசைப்பட்டு அதற்கு அடிமையாக இல்லாமல் இருப்பதே. விவேகம், வைராக்கியத்தை அடைந்து, மன ஒருமுகப்பாடு, மனத்தூய்மை, புலனடக்கம், மனவடக்கம், அகிம்சை, பொறுமை, தவம், தியாகம் ஆகிய சாதனைகளால் யோகத்தை எளிதாக அடைய முடியும்.

லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..

………ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: