சந்திர வம்சத்து மன்னன் நகுசனின்பேரனும், யயாதியின் மகனும் ஆன மன்னர் யது, ஒரு நாள் முற்றும் துறந்த இளவயது அவதூதரான தத்தாத்ரேயரை சந்தித்து, நீங்கள் எந்த செயலையும் செய்யாமலேயே மிகவும் ஆழமான தெளிந்த நல்லறிவு எப்படி கிடைத்தது,
எதை ஆதாரமாகக் கொண்டு சிறந்த அறிவாளியான தாங்கள் ஒரு சிறுவனைப் போல் மகிழ்ச்சியாக உலகத்தில் திரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவதூத சந்நியாசி தான், யார் யார் மூலம் அறிவு (ஞானம்) பெற்றதாக விவரிக்கிறார்.
- பூமியிடமிருந்து, பொறுமை மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் என்ற குணத்தையும்
- வாயுவிடமிருந்து, உயிர் நிலைப்பதற்கு போதுமான அளவு உணவு உட்கொள்ள வேண்டும் என்ற அறிவும்
- ஆகாயத்திடமிருந்து, ஆத்மா எங்கும் நிறைந்திருக்கிறது என்ற ஞானத்தையும்; நீரிடமிருந்து தூய்மையும்; அக்கினியிடமிருந்து குற்றமுடையது என்று எததையும் ஒதுக்கித் தள்ளாத மனநிலையும்
- சந்திரனிடமிருந்து சட உடல் தோன்றி மறைந்தாலும், ஆத்மா மறைவது இல்லை என்ற ஞானத்தையும்
- சூரியனிடமிருந்து, ஒரு பொருளைப் பெற்றுக் கொள்வதிலும், அதை வழங்குவதிலும் ஒட்டுதல் இல்லாமல் யோகி இருக்க வேண்டும் என்ற ஞானத்தையும்
- புறாவிடமிருந்து, முக்தியை அடைவதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாயில் போன்ற மனித உடலை அடைந்தும், புறாவைப் போல் உலகப்பற்றில் (பந்தபாசத்தில்) ஆழ்ந்திருப்பவர்கள் முக்தியை அடைய முடியாது என்ற ஞானத்தையும் அடைந்ததாக அவதூதர், யது மன்னரிடம் கூறினார்
- மலைபாம்பு மூலம், யோகி தானாக எது கிடைகிறதோ, அதையே உண்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்ற ஞானமும்
- கடலிடமிருந்து, ஒரு ஞானி தன் விருப்பங்கள் நிறைவேறும்போது மகிழ்ச்சியும், நிறைவேறாதபோது தளர்ந்து போய் கலக்கம் அடையக்கூடாது என்ற ஞானமும்
- விட்டில்பூச்சி மூலம், மாயையால் படைக்கப்பட்ட பொருட்களில் மயங்கி தன் அறிவை இழந்து, விளக்கில் வீழ்ந்து விட்டில் பூச்சி அழிந்து விடுகிறது. எனவே மாயையில் மயக்கம் கொள்ளக்கூடாது என்ற ஞானமும்
- தேனீ இடமிருந்து, வயிற்றுத் தேவைக்கு மேல் பிச்சை எடுக்கக் கூடாது என்றும் மற்றும் சாத்திர நூல்களிலிருந்து சாரமான தத்துவங்களை மட்டும் மனதில் பதிந்து கொள்ள வேண்டும் என்ற ஞானத்தையும்
- ஆண் யாணை மூலம், ஞானிகள் பெண்களிடம் மயங்கக் கூடாது என்ற ஞானத்தையும்
- தேன் எடுப்பவன் மூலம், இல்லறத்தானின் செல்வத்துக்கு முதன்மை உரிமையாளர் துறவிதான் என்ற ஞானத்தையும்
- மான் மூலம், காட்டில் வாழம் துறவி ஒருபோதும் உலக இன்பங்கள் தொடர்பான பாடல்கள் கேட்கக் கூடாது என்ற ஞானத்தையும்
- மீன் மூலம், நாக்கை (உணவின் மீது ஆசை) கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஞானத்தையும்
- பிங்களா என்ற வேசி மூலம், பகவான் எனக்கு அருளிய நல்லறிவை ஏற்றுக்கொண்டு, உலக காமபோகங்களைத் துறந்து, பகவானை சரணடைய வேண்டும் என்ற ஞானத்தையும் அடைந்தாக கூறினார் அவதூதர்.
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
……..ஸ்ரீ