துர்கா சூக்தம்

இன்று நாம் காணப் போவது துர்கா ஸூக்தம் :

துர்கா ஸூக்தம்

ஜாதவேதஸே ஸுனவாம ஸோம- மராத்தி யதோ நித ஹாதி வேத : என தொடங்குகிறது இவ் ஸூக்தம்.

தேவியின் பல ரூபங்களில் ஒன்றான துர்கா தேவியை பிரார்திப்பதாக. அமைந்துள்ளது.

ரிக் வேதத்தில் பல இடங்களில் காணப்படும் இவ் துதிகள் ரிக் வேத முதன்மை கடவுளான அக்னியை போற்றி வணங்குவதாகவும், தைத்ரீய ஆரண்யகத்தில் பல இடங்களில் இது சேர்க்க பட்டு துர்கா ஸுக்தமாக அமைக்க பட்டுள்ளது.

இவ் ஸூக்தம் வாழ்க்கையில் ஏற்படும் இடையூர்களை நீக்கவும் , பிணி களை நீக்கவும் கார்ய தடைகளை நீக்கவும் துர்கை யை வேண்டுவதாக உள்ளது.

துர்கா தேவியை நவராத்ரி பூஜையில் ( 9 நாட்கள் ) முதல் மூன்று நாட்கள் பூஜித்து வருகிறோம்.

ராகு பகவானின் அதிதேவதை துர்கை. எனவேதான் ராகு காலத்தில் துர்கை வழிபாடு சிறந்ததாக உள்ளது.

ராகு தோஷம் உள்ளவர்கள், மற்றும் திருமண தடை அகல, கார்ய தடை நீங்க, தீய சக்திகள் விலக துர்கை அம்மனை வழிபடுகிறார்கள்

ராகு காலை பூஜையில் எலுமிச்சை மாலை அணிவிப்பது விசேஷம்.
விளக்கு ஏற்றுவதும் நல்லது ( விளக்கு இரண்டு விளக்கு ஏற்றவேண்டும் )

இந்த துர்கா ஸூக்தம் தெரியாதவர்கள் துர்காதேவியை

” ஓம் தும் துர்காயை நம : ”

என்ற எளிய மந்திரத்தை மனமுருகி காலை மாலை வேளைகளில் 108 முறை துதித்து வர எல்லா தடைகளும் நீங்கி வாழ்வில் நல்லதே நடக்கும். !

லோகா சமஸ்தா சுகினோ பவந்து……..
……….. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: