இன்று நாம் தெரிந்துகொள்ளப்போவது
” தன்வந்திரி ”
நம் மதத்தின் உடல் ஆரோக்யதிற்கான தெய்வம். இவர் விஷ்ணுவின் ஒரு அவதாரம். இந்த அவதாரம் விஷ்ணுவின் தசாவதாரத்தில் சேராது. முக்கியமான சில வைஷ்ணவ ஆலயங்களில் மட்டும் தனி சன்னதியில் காணப்படுவர்.
இவர் தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர்வேதத்தின் கடவுள் என அழைப்பர்.
அவதாரம் : தேவர்கள் அசுரர்களிடம் போரிட்டு வலிமை குன்றி பிரம்மனிடமுடம் இந்த்ரனிடமும் வேண்ட , அவர்களை காக்க பாற்கடல் கடையப்பட்டது. அதிலிருந்து அவதாரம் செய்தவர் ” தன்வந்திரி ”
மருத்துவம் : பிரம்மன் நான்கு வேதங்களையும் படைத்து, ஆதாரமான ஆயுர்வேதத்தியும் படைத்தான். இது உலகத்தில் எல்லோரையும் சென்றடைய சூர்ய தேவனை நியமித்தான்.
சூர்ய தேவனின் சீடர்களில் மிக முக்கியனானவர் “தன்வந்திரி “.
தன்வந்திரி வானத்தில் வசிப்பவர், இவரையே சூர்ய தேவனாகவும் சொல்வர்.
நோய்கள், துர்மரணம் வராமல் தடுப்பது தன்வந்திரி விரதம்.
நம் உலக வாழ்க்கைக்கு செல்வம் எப்படி முக்கியமோ அப்படி முக்கியம் உடல் ஆரோக்கியம். இந்து மதத்தில் நோய்களை தீர்க்கும் கடவுளாக தன்வந்திரி இருக்கிறார்.
தன்வந்திரி விரதம் இருக்க உகந்த நாள் மாதந்தோறும் தேய்பிறையில் வரும் திரியோதசி நாள்.
“தன்வந்திரி மந்திரம் “‘
ஓம் நமோ பகவதே வாசுதேவயா
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய நாசாய த்ரிலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம:
“தன்வந்திரி காயத்ரி”
ஆதி வைத்யாய வித்மஹே ஆரோக்ய அனுக்ராஹ்ய தீமஹி
தன்நோ தன்வந்திரி ப்ரசோதயாத் !
விரத முறைகளை நம்மால் கடைபிடிக்க முடியவில்லையென்றாலும் தினமும் காலையில் குளித்துவிட்டு படத்தின் முன்னாள் உட்கார்ந்து மேல சொல்லப்பட்ட தன்வந்திரி மந்த்ரத்தையோ அல்லது தன்வந்திரி காயத்ரி மந்த்ரத்தையோ முடிந்த வரையில் மனமுருகி பாராயணம் செய்யவும்.
தீராத நாட்பட்ட நோய்களும் அவனை வேண்டுவதால் நோய்கள் விலகி ஆரோக்யம் பெறுவது நிச்சயம்.
நமது உலக வாழ்க்கையில் ஏற்படும் பிணிகளை நீக்க, இறைவனால் கொடுக்கப்பட்ட மருத்துவர் தன்வந்திரி பகவானை போற்றி வழிபட்டு ஆரோக்யத்துடன் வாழ வேண்டுவோமாக……..
லோகா சமஸ்தா சுகினோ பவந்து…………
…….. ஸ்ரீ