தெரிந்ததும் தெரியாததும் #1

தெரிந்ததும் தெரியாததும்
பகுதி

1.விநாயக சதுர்த்தி கொண்டாடும் மாதம் எது ? அது வளர்பிறை சதுர்த்தியா அல்லது தேய்பிறை சதுர்த்தியிலா ?

2.மஹாபிரதஷம் நேரத்தில் வைணவர்கள் யாரை சேவிக்க வேண்டும் ?

3.வேதங்களை மீட்டு கொடுத்த அவதாரம் எது ?

4.சொக்கநாதர் ஆலயம் எங்கு உள்ளது?

5.சப்த ரிஷிகள் யார் யார் ?

  1. அபிராமி பட்டர் வாழ்ந்த ஊர் எது ?

  2. அயூர் வேதத்திற்கு அதிபதி யார் ?

  3. குகன் என்று போற்றப்படும் தெய்வம் எது ?

  4. புரட்டாசி மாத பெயரை சங்கல்ப் பத்தில் என்ன என்று சொல்வார்கள்.

  5. சித்திரை நட்சத்திரம் எத்தனாவது நட்சத்திரம். ?

  6. அயனம் என்ன என்ன ?

  7. வைகுண்ட ஏகாதசி வரும் தமிழ் மாதம் எது ?

  8. பிறப்பில் வாரத அவதாரம் தசாவதாரத்தில் எது ?

  9. இராமானுஜர் பிறந்த ஊர் எது ?

  10. கீதா சாரம் எத்தனை வரிகள்

இதன் பதில்களை நாளை பதிவில் பாருங்கள்.

……. ஸ்ரீ

……………………………………………………

கேள்விக்கான பதில் :

  1. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி 2. ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் 3. மச்சாவதாரம் 4. மதுரை. 5.காஸ்யபர், அத்ரி, பரத்வாஜர்,விஸ்வாமித்திரர்,கௌதமர், ஜமதக்னி, வசிஷ்டர். 6.திருக்கடையூர் 7. தன்வந்திரி 8.முருகன் 9. கன்யா 10. 14 வது 11. தக்ஷிணாயானம், உத்தராயணம் 12. மார்கழி 13. நரசிம்மர் 14. ஸ்ரீ பெரும்பத்தூர் 15. 15 வரிகள்.

…………………………………………………..

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: