ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது தெரிந்ததும் தெரியாததும் பகுதி
இதன் பதில்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
- வியாசர் எழுதிய புராணங்கள் எத்தனை ?
- வேதங்களில் மிகவும் பழைமையானது எது?
- திருக்கோவிலூர் பெருமாளின் பெயர் என்ன?
- சிவனின் ஐந்து தொழில்கள் யாவை?
- திருஆவினங்குடி என்ற முருகனின் அற்படை வீடு எது?
- தேவேந்திரனின் வாகனமான யானையின் பெயர் என்ன?
- சீதையை மணமுடிக்க இராமர் ஒடித்த வில்லின் பெயர் ?
- அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் யார்?
- சைவ சமய குரவரர் யார் யார்?
- சிவபெருமான் யாருக்காக காலனை காலால் உதைத்தார்?
- சிவனுக்கு எத்தனை வடிவங்கள்?
- திருமுருகாற்று்படையை இயற்றியது யார்?
- சூரபத்மன் முருகனிடம் போரிடும் பொழுது எந்த மரமாக மாறி நின்றான்?
- காவேரி உற்பத்தியாகும் இடம்?
- உப்பினால் செய்த லிங்கம் எங்குள்ளது?
- குரு பூர்ணிமாவில் சன்யாசிகள் செய்யும் பூஜா ?
- பரமேஸ்வரனை அதிதேவதயாக கொண்ட நக்ஷத்திரம்?
- மஹா பிரதோஷம் வைணவர்கள் யாரை வணங்குவர்?
- தக்ஷிணாமூர்த்தி காட்டும் முத்திரையின் பெயர் என்ன?
- பூதத்தாழ்வார் பிறந்த ஊர்?
- சாம வேதம் எதை ஆதாரமாகக் கொண்டது?
பதில்கள்:
- 18
- ரிக் வேதம்
- திருவிக்கரமன்
- படைத்த்ல், காத்தல், அழித்தல், மறைத்தல், மற்றும் அருளல்.
- பழனி
- ஐராவதம்
- சிவதனுசு
- சுக்ராச்சார்யார்
- அப்பர்,.சம்பந்தர், சுந்தரர் மாணிக்கவாசகர்
- மார்க்கண்டேயர்
- 64
- நக்கீரன்
- மாமரம்
- கர்நாடக மாநிலம் தலை காவிரி
- இராமேஸ்வரம்
- வியாச பூஜா
- திருவாதிரை
- ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்
- சின்முத்திரை
- திருக்கடல்மல்லை
- இசை
லோகா சமஸ்தா சுகிநோ பவந்து..
………ஸ்ரீ