நாம் காணப் போவது :
தெரிந்ததும் தெரியாததும் பகுதி:
- ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர் ?
- அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த ஸ்தலம் எது ?
- நினைத்தாலே முக்தி கொடுக்கும் ஸ்தலம் எது ?
- திருநள்ளாறு (சனி பகவான்) ஆலயத்தில் உள்ள சிவனின் பெயர் என்ன ?
- பஞ்ச பூத ஸ்தலங்களில் வாயு (காற்று) ஸ்தலம் எது.?
- ஆலய கும்பாபிஷேகம் எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை செய்யவேண்டும் ?
- சௌதர்யலஹரியை அருளியவர் யார் ?
- மகாலிங்க சுவாமி திருக்கோவில் எங்குள்ளது ?
- காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற இடம் எது ?
- நாச்சியார் திருமொழியை இயற்றியவர் யார் ?
- சப்த நதிகள் எவை எவை ?
- திருப்பதியில் உள்ள ஏழு மலையின் பெயர்கள் என்ன ?
- முருகன் கோவம் தணிய தங்கிய இடம் எது.
- கனகதாரா ஸ்தோத்திரத்தை இயற்றியவர் யார் ?
- தமிழ் மாதங்களில் எந்த மாதத்தை ‘ துலா ‘ மாதம் என்று அழைப்பர் ?
- நாராயண பட்டத்ரி எழுதிய ஸ்தோத்திரம் எது ? எங்கு எழுதப் பட்டது ?
- கந்தகோட்டம் எங்குள்ளது ?
- கிருஷ்ணர் சுதாமா என்று யாரை அழைத்தார்.?
- அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் எங்கு எந்த ஆற்றில் நடக்கும் ?
- மனதிலேயே இறைவனக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த நாயனார் யார் ?
………. ஸ்ரீ
பதில்கள் :
1. 12 பேர். 2. மயிலை கபாலீஸ்வரர் கோவில். 3. திருவண்ணாமலை 4. தர்பாரண்யேஸ்வரர். 5. திருக்காளத்தி. 6. 12 வருடம் 7. ஆதி சங்கரர். 8. திருவிடைமருதூர். 9. திருவாலங்காடு 10. கோதை நாச்சியார் (ஆண்டாள்) 11. கங்கை யமுனை கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து, காவேரி. 12. கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி ஆகியவையாகும். 13. திருத்தணி 14. ஆதிசங்கரர் 15. ஐப்பசி. 16. நாராயணீயம் 17. சென்னை 18. குசேலர். 19. மதுரை, வைகை ஆறு. 20. பூசலார்.