தெரிந்ததும் தெரியாததும் #4

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது :

” தெரிந்ததும் – தெரியாததும் ”

  1. நவகிரக ஆலயத்தில் செவ்வாய் கிரக பரிகார ஆலயம் எது ?
  2. ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊர் எது ?
  3. ஆதிசங்கரர் பிறந்த ஊர் எது ?
  4. சீதை பிடித்த மணல் லிங்கத்தை ராமன் பூஜை செய்த இடம் ?
  5. பூலோக வைகுண்டம் என்று கூறப்படும் ஸ்தலம் எது ?
  6. சங்கீத மும்மூர்த்திகள் யார் யார்?
  7. ஓம் நமோ நாராயணா என்ற எட்டு எழுத்து மந்திரத்தை இராமானுஜர் மக்களுக்கு உபதேசித்த இடம் ?
  8. குருவாயூர் ஆலயத்தில் மூலவர் பெயர் என்ன ?
  9. திருவாசகம் இயற்றியவர் யார் ?
  10. பஞ்ச பூத ஸ்தலத்தில் நீர் ஸ்தலம் எது ?
  11. குதிரை முகமும் மனித உடலும் கொண்ட தெய்வம்.?
  12. பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் வடிவமாக காட்சி தரும் தெய்வம் எது ?
  13. பிரஹலாதனுக்கு ஹரி மந்திரத்தை உபதேசித்தவர் யார்?
  14. ஜோதி வழிபாடு செய்த மகான்?
  15. நவராத்திரியை அரசு விழாவாக கொண்டாடப்படும் திருத்தலம் எது ?
  16. சிதம்பரத்திற்கு மற்றொரு பெயர் என்ன ?
  17. ஞானசம்பந்தருக்காக நந்தி விலகி நின்ற ஸ்தலம் எது ?
  18. பக்தன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் பக்தன்… யார்?
  19. தர்மசம்வர்த்தினி என்னும் திருநாமம் கொண்டு அறம் வளர்க்கும் அம்பிகை தலம்… ?
  20. கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய புராணம்…..?

பதில்களை முயற்சி செய்து பாருங்களேன் !

இதன் பதில்கள் நாளை பதிவில் இடம் பெறும்.

லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து…..

……… ஸ்ரீ
…………………………………………….

நல்ல குடும்பம் :

சிமெண்டும் மணலும் இல்லா
சீர்மிகு கட்டிடம் !
அன்போடு பாசத்துடன் இணைந்த ஆலயம் !!

இன்பமுடன் உறவு காணும் சரணாலயம் !
பின்னி உறவாடும் பாசவலைகளின்
தேவாலயம் !!

…………………………………………….

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: