தெரிந்ததும் தெரியாததும் #5

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது :

“தெரிந்தது தெரியாததும் பகுதி”
  1. மார்கழி மாதத்தில் சிவனுக்கும் விஷ்ணுக்கும் வரும் விசேஷ நாட்கள் ?
  2. சரஸ்வதி தேவியின் ஆலயம் உள்ள இடம்.
  3. கீழ் பெரும்பள்ளம் எந்த நவகிரக பரிகார ஸ்தலம் ?
  4. அனுஷ நட்சத்திரம் அன்று பூஜிக்க படும் மகான் ?
  5. தாமரை இலையில் யார் யார் சாப்பிடலாம் ?
  6. மகாபாரதத்தை இயற்றியவர் யார்?
  7. வள்ளலார் இயற் பெயர் என்ன?
  8. நடராஜரின் பஞ்ச சபையில் இரத்தின சபை எது ?
  9. பெருமாளே திதி கொடுக்கும் ஸ்தலம் எங்கு உள்ளது
  10. தேவர்களின் குருவாக இருப்பவர் யார் ?
  11. சூரியனின் அம்சமாக குந்திக்கு பிறந்த பிள்ளை ?
  12. ஆதிசங்கரரின் தாயார் பெயர் ?
  13. தட்சினாயண புண்யகாலம் ஆரம்பிக்கும் மாதம்.?
  14. கார்த்திகை தீப திருநாளில் அவதரித்த ஆழ்வார் யார்?
  15. சிவ அம்சமாக போற்றப்படும் ராம பக்தர் யார்?
  16. நான்கு திவ்ய தேசம் ஒருங்கே அமைந்த கோவில் ?
  17. யாது மாகி நின்றாய் காளி என உமையவளை போற்றும் புலவர் ?
  18. சிவனின் நடனத்தை காணும் பேறு பெற்ற நாயன்மார் ?
  19. தயுமானசுவாமி கோவில் இருக்கும் ஊர் எது ?
  20. எந்த கோவிலில் சுவாமிக்கு நைவேத்யத்தில் உப்பு சேர்ப்பதில்லை ?

சிந்தனைக்கு:

தவறை நீ செய்தால் ஒத்துக்கொள் .விரைவில் சரி செய்து கொள்ளலாம்… ஆனால் செய்த தவறை தவறே இல்லை என்று நிரூபிப்பவர்களை என்றுமே சரி செய்ய முடியாது…

எதை இழக்கும் நிலைக்கு நீ தள்ளப்பட்டாலும் உன் பொறுமையை இழக்கும் நிலைக்கு மட்டும் வந்து விடாதே. நீ இழந்தது எல்லாம் நிற்சயம் கிடைக்கும் பொறுமையின் வழியே நீ முயற்சி செய்தால்….!


தெரிந்ததும் தெரியாததும் பகுதி கேள்விக்கான பதில்கள் :

1.திருவாதிரை (ஆருத்ரா) , வைகுண்ட ஏகாதசி.
2. கூத்தனூர்
3. கேது கிரகம்
4. காஞ்சி மஹா பெரியவா
5. பிரம்மச்சாரி, சன்யாசி.
6. வியாசர்
7. இராமலிங்க அடிகளார்.
8. திருவாலங்காடு
9. கும்பகோணம் சாரங்கபாணி, நெமிலி, லக்ஷ்மி நாராயண பெருமாள்.
10.பிரகஸ்பதி
11.கர்ணன்
12.ஆர்யாம்பாள்
13.ஆடி மாதம்
14.திருமங்கையாழ்வார்
15.அனுமன்
16.காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில்
17.பாரதியார்
18.காரைக்கால் அம்மையார்.
19. திருச்சி
20.ஒப்பிலியப்பன் கோவில்.

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: