ஆன்மீக சாரலில் நாம் காணப்போவது: தெரிந்ததும் தெரியாததும் பகுதி
இன்றைய கேள்விகளுக்கான பதில்களை கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
- அம்மை சிவகாம சுந்தரியாக வீற்றிருக்கும் ஸ்தலம்?
- அலங்கார பிரியர் யார் ? அபிஷேக பிரியர் யார்?
- இசைக்கு மதா பிதா யார்?
- யாகங்களில் சிறந்த யாகம்?
- தேய் பிறை அஷ்டமியில் விழிபடும் தெய்வம் ?
- சனிப்பெயர்ச்சி எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை வரும்?
- பானு சப்தமி என்பது எந்த நாள்?
- விதுரநீதி எனும் நீதி சாஸ்திரம் யாரால் யாருக்கு கூறப்பட்டது.
- விஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்கள் யாவை?
- குந்த புஷ்பம் என்று எதற்கு பெயர்?
- காசி விஸ்வநாதர் இருக்கும் இடத்தில் வீற்றிருக்கும் அம்பிகையின் பெயர் என்ன?
- ஆதிசங்கரர் நிறுவிய சாரதா பீடம் எங்குள்ளது.
- அர்த்தநாரீஸ்வரர் கோவில் தமிழ் நாட்டில் எங்குள்ளது?
- கடன் தொல்லையிலிருந்து விடுபட கிரி பிரதக்ஷிணம் செய்ய வேண்டிய நாள்?
- தன் கண்ணயே சிவனுக்கு அளித்த பக்தர்.
- சௌந்தர்ய லஹரி 2 பகுதியில் முதல் பகுதி பெயர் என்ன ?
- நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடிய ஸ்தலம் எது?
- கும்ப மேளா நடக்கும் இடம்?
- குரு பகவான் பரிகார ஸ்தலம்
- இராவணன் எந்த இசை கருவி வாசிப்பதில் வல்லமை படைத்தவன்.
- அரசாட்சியை துறந்து துறவறம் பூண்ட ஆழ்வார்?
பதில்கள்:
- சிதம்பரம்
- விஷ்ணு, சிவன்
- ஸ்ருதி மாதா, லய பிதா
- அசுவமேத யாகம்
- பைரவர்
- இரண்டரை வருடம்
- ஞாயிற்றுக்கிழமையும், சப்தமியும் சேர்ந்து வரும் நாள்.
- விதுரரால் த்ருதுராஷ்டருக்கு உபதேசம் செய்யப்பட்டது.
- சங்கு, சக்ரம், கதை, சார்ங்கம், கட்கம்.
- மல்லிகை
- காசி விசாலாட்சி
- சிருங்கேரி
- திருச்செங்கோடு
- செவ்வாய்க் கிழமை
- கண்ணப்பர்
- ஆனந்த லஹரி
- சிதம்பரம் கனக சபை
- அலகாபாத், ஹரித்வார்
- ஆலங்குடி
- வீணை
- குலசேகர ஆழ்வார்.