நாம சங்கீர்த்தனம் – 2

இன்று நாம் தெரிந்துகொள்ளப்போவது நாம ஸ்மரனை ( நாம சங்கீர்த்தனம் ) தொடர்ச்சி ……. 2.

பரம் பொருள் பகவானை அடைய பல மார்ககங்கள் இருந்தாலும் அவற்றுள் நாம சங்கீர்தன வழியே சிறந்தது. அதன் பெருமையோ அளவற்றது.

கீதையில் பகவான் கிருஷ்ணன்
“யக்ஞானம் ஜப யஜ்யோஸ்மி ” என்று உரைக்கிறார்.
அனைத்து யக்ஞங்களிலும் நான் ஜப யக்ஞமாக இருக்கிறேன் ( நாம சங்கீர்த்தனம்) என்று கூறுகிறார்.

க்ருதயுகத்தில் தியான மார்க்கமாகவும், த்ரேதா யுகத்தில் வேள்வி மார்க்கமாகவும், துவாபர யுகத்தில் விக்ரஹ வடிவை பூஜித்தும் கிடைத்த பலன் கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் மூலம் கிடைத்துவிடும்.

திருமங்கை ஆழ்வார் “நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயண எனும் நாமம்” என்று சொல்லியிருக்கிறார்.
நம்மாழ்வார் கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் என்னும் நாமம் திண்ணம் நாராயணமே என்கிறார். ஸ்ரீ ஆண்டாள், ஓங்கி ஒலகலந்து உத்தமன் பேர் பாடி என்று பாடினார்.

நாமசங்கீர்தனம் மூலம் பகவத் ஸ்வரூபத்தை கண்ட புண்ய புருஷர்கள் :
ஜெயதேவர், நாராயண தீர்த்தர், ராமதாசர், புரந்தர தாசர், தியாகப்ரஹ்மம் இன்னும் பலர்.

இசையுடன், பக்க வாத்தியங்களுடன் பகவன் நாமத்தை சொல்லுவதையே பஜனை என்று கூறிவருகிறோம். பின்னர் அது தக்ஷிண பஜனை ஸம்ப்ரதாயமாக அமைக்கப்பட்டது.
பாரம்பரிய பஜன்களில் நிர்குணி, கோரக்ஹனாதி, வல்லபபந்தி, அஷ்ட சாப், மதுர பக்தி போன்றவை மிகப் பிரபலமாக உள்ளது. தட்சிண சம்பிரதாய பஜன் முறையில் கீர்த்தனங்கள், நாமாவளிகள் போன்றவை. அதற்கு என்று உள்ள தனியான சிறப்பு வழியில் பாடப்பட்டு வருகிறது.
இதை முறையாக்கியவர்கள் ஸ்ரீபோதேந்திர சுவாமிகள், மருதாநல்லூர் சுவாமிகள், புதுக்கோட்டை கோபாலகிருஷ்ணன் பாகவதர்.

இந்த பந்ததியில் தோடய மங்களம், குரு கீர்த்தனம், அஷ்டபதி, நாராயண தரங்கிணி , அபங்கம், பூஜா விதானம், உபச்சாரம் என பல உண்டு. திவ்ய நாம பஜனையில் தீப ப்ரதக்ஷிணம், மற்றும் டோலோத்சவம் நடைபெறும்.

இதில் முக்கியமான பகுதி அஷ்டபதி எனும் “கீத கோவிந்தம். ”
அஷ்டபதி ஜெயதேவரால் இயற்றப்பட்டது. கண்ணன், ராதையின்மேல் கொண்ட பிரேமயினை விவரித்துள்ளது.

அஷ்டபதி மொத்தம் 12 சர்க்கமாகவும் 24 பாடல்கள், 8 சரணங்கள் கொண்டதால்
அஷ்டபதி என்று அழைக்கப்பட்டது. இதனை ஜெயதேவர் நாயகா நாயகி பாவத்தில் இயற்றியுள்ளார்.
வடமொழியில் செவிக்கு மதுரமான சொற்றொடர்களைக் கொண்ட இந்த கீதகோவிந்தம் கண்ணன்- ராதையின் காதல் விளையாட்டுக்களை மதுரமான காதல் காவியமாக்கித் தந்துள்ளது. மேலும், கண்ணன் கோபியர்களிடம் செய்த லீலைகள், பாகவதக் கதைகள், இதிகாச, புராணச் செய்திகள் எனப் பலவற்றை சொல்கிறது.

முதல் அஷ்டபதி தசாவரத்தை சொல்லி அமைக்கப்பட்டுள்ளது.
கண்ணன் ராதை மேல் கொண்ட காதலையும், லீலைகளையும் விவரமாக விரசமில்லாமல் அழகான முறையில் மற்ற அஷ்டபத்தில் சொல்லியிருக்கிறார்.

இதன் 19 வது அஷ்டபதியில் பக வானே சாக்ஷியாகி வந்து அனுகிரஹித்த விவரங்களை நாளை பார்ப்போம்.

லோகா சமஸ்தா சுகினோ பவந்து………
. …….. ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: