நாராயணீயம் ( பகுதி 2 )

இன்று நாம் காணவிருப்பது ஸ்ரீமன் நாராயணீயத்தின் தொடர்ச்சி……. (2)

குருவாயூரப்பன் (கிருஷ்ணன் )
ஆலயத்துக்கு வந்த பட்டத்ரி அங்கேயே 100 நாட்கள் தங்கி தினமும் கிருஷ்ணனை நோக்கி பாடுகிறார்.

நாராயணீயம் மொத்தம் 100 தசகங்கள் கொண்டது. ஒவ்வொரு தசகத்திலும் 10 ஸ்லோகங்கள் உள்ளது.
ஒவ்வாரு தசகமும் ஒரு சரித்திரம் / விஷயங்களை கூறுகிறது.

இங்கே குறிப்பாக சில தசகங்களும் அதன் சிறப்பும் குறிப்பிட்டுள்ளேன்.

முதல் தசகம் : பகவத் மகிமையை சொல்கிறது
3 வது தசகம் : பக்தனுடைய லக்ஷணத்தை சொல்கிறது
8 வது தசகம் : பிரபஞ்சமும் ஸ்ரிஷ்டியும்.
12வது தசகம் : வராஹ அவதாரம்.
17 வது தசகம் : துருவ சரித்திரம்.
24வது தசகம் : பிரகலாத சரித்திரம்.
25வது தசகம் : நரசிம்ம அவதாரம்
34வது தசகம் : ராம சரிதம்
38வது தசகம் : கிருஷ்ண ஜனனம்.
55வது தசகம் : காளிங்க நர்த்தனம்.
64வது தசகம் : ஸ்ரீ கோவிந்த பட்டாபிஷேகம்.
79வது தசகம் : ருக்மணி கல்யாணம்.

இப்படி தினமும் ஒரு தசகம் என 10 ஸ்லோகங்கள் பாடிவந்தார்.

100 வது நாள் நூறாவது தசகமாக குருவாயூரப்பனை ( கிருஷ்ணனை )
(கேசாதி பாதம்,) தலை முதல் பாதம் வரை வர்ணித்து பாடுகிறார்.
இந்த நூறாவது தசகம் மணிமகுடமான தசகமாக உள்ளது.

அவர் ஒவ்வாரு தசகம் பாடிய பின், குருவாயூரப்பனை நோக்கி இது சரியா இப்படி நடந்ததா என்று கேட்பாராம், இவரது பக்தியை பார்த்து குருவாயூரப்பன் ஆம் என்பது போல் தலையை அசைத்து ஆசீர்வதித்து ஒப்புதல் கொடுப்பாராம்.

இவர் 24 வது தசகமான ப்ரஹ்லாத சரித்திரம் சொல்லும்போது குருவாயூரப்பன் சன்னதியிலிருந்து சிம்ம கர்ஜனை கேட்டதாம். அங்கு நரசிம்மர் காட்சி அளித்ததாக கூறப்படுகிறது.

மகத்தான இந்த நாராயணீயத்தை நோயினால் பாதிக்கப்பட்ட பட்டர் கைப்பட எழுத முடியாத நிலையில், இவர் ஸ்லோகங்களை பாட இவரது சகோதரர் எழுதுவராம்.

பக்தியின் ரசமாக படைக்கப்பட்ட இந்த ஸ்லோகத்தின் ஒரு சில முக்கிய தசகத்தின் விளக்கங்கள், மற்றும் பயன்களை நாளை பாருங்கள்.
…… நாளையும் மலரும்.

லோகா சமஸ்தா சுகினோ பவந்து……….
……… ஸ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: