இன்று நாம் அறிந்துகொள்ளப்போவது
“பகவன் நாமம் சொல்லுதல்” :
இந்த கலியுகத்தில் இறைவனை அடையக்கூடிய பக்தி மார்கத்தில் மிகவும் சுலபமான வழி “நாம
சங்கீர்த்தனம் ” அதன் மூலம் பகவன் நாமாவை சொல்லி அவனை அடைவது மிகவும் எளிது.
இந்த பகவான் நாமாவை சொல்ல எந்த நியமங்களும் கிடையாது, நேர காலமும் கிடையாது. எந்த இடத்திலும் சொல்லலாம்.
நாரதர் பகவானிடம் எங்கு வாசம் செய்கிறாய் என கேட்க பகவான், நான் என்னுடைய இடமான வைகுண்டத்தில் வாசம் செய்வதில்லை, தவம் செய்யும் ரிஷிகள் மனதிலும் இல்லை, என் பக்தர்கள் என்னை நினைத்து எங்கு நாமாக்களை சொல்ல்கிறார்களோ அந்த இடத்தில் இருப்பேன் என பதில் அளிக்கிறார். அத்தகைய மேன்மை கொண்ட சுலபமான மார்க்கம் நாம ஸ்மரனை.
ஸ்ரீ புரந்தரதாசர் தனது கீர்த்தனத்தில்
நரஜன்ம பந்தாக நாலிகேயிருவாக கிருஷ்ணா என பாராதே !……
ஹே மானிடா அரிதான இந்த மானிட பிறவியில் பிறந்த, நீ பேசுகின்ற தன்மையை பெற்றவனே கிருஷ்ணா என்று ஒரு முறையாவது அவன் நாமத்தை சொல்லலாமே என சொல்கிறார்.
கிருஷ்ணா எந்தரே சகல கஷ்டவு பரிகார கிருஷ்ணா என பாராதே !………
வாழ்க்கையில் உனக்கு நிறைய கஷ்டங்கள் வரிசையாக வருகிறது. அதற்கு பரிஹாரம் தேடி ஒவொவரு தெய்வமாக ஓடி அலைய வேண்டாம். இருக்கும் இடத்திலேயே கிருஷ்ணா என்று சொல்லலாமே….
மலகித்து மைமுரி தேளுகதலொம்மே கிருஷ்ணா என பாராதே !……….
நீ காலையில் உறக்கத்திலிருந்து விழித்து கொள்ளும்போது, படுக்கையை விட்டு எழ வேண்டாம் கிருஷ்ணா என்று சொல்லலாமே. நீ சோம்பல் முறிக்கும் போதும் கிருஷ்ணா என்று சொல்லலாமே என்று கூறுகிறார்.
நீ வீட்டில் ஒரு அறையிலிருந்து
வேறு அறைக்கு செல்லும்போது, உணவு உண்ணும் போதும், இப்படி எந்த கார்யங்கள் செய்தாலும் அதில் கிருஷ்ணா என்று சொல்லலாமே.
நமக்கு யாகம், யஞங்கள், ஜபம் செய்ய முடியாவிட்டாலும் இறைவன் நாமத்தை விடாது சொன்னாலே பலன் கிடைப்பது நிச்சயம்.
“ஆதி மூலமே ” என்று முதலையின் பிடியில் சிக்கிய யானைக்கு அருள்புரிந்ததும் , த்ரெளபதி கிருஷ்ணா என்று கூப்பிட்டவுடன் வந்து அவளது மானத்தை காப்பாற்றியதும் அவனது நாமா மகிமை தான்.
நமது வாழ்க்கையில் அதுவும் இந்த கலியுகத்தில் இறைவனை எளிதில் அடையக்கூடிய வழி வானத்து நாமத்தை சொல்லும் பக்தி வழி தான் சுலபமானது.
மேலும் நாம சங்கீர்த்தனையின் மகிமையினை நாளை பார்ப்போம்.
… தொடரும் பகவன் நாமம்…
லோகா சமஸ்தா சுகினோ பவந்து……
…….. ஸ்ரீ