மஹா பெரியவா நவ மணி மாலை
அனுஷத்தில் உதித்து அறம் தனை காத்து
கருணையின் கடலாய் திகழ்ந்தவனே
காலடி சங்கரர் வழிதனில் வாழ்ந்த காமாட்சி தேவியின் கருணை
தெய்வம் .
வேதங்கள் தழைக்க வேதமாய் வாழ்ந்து பாரினில் வேதம் வளர்த்தவனே
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர ஜெகத் குருவே 1
……….,…………………………………..
விதியது பயனாய் விழுமதி புரத்தில் வேத வம்சமதில் உத்திதவனே
ஸ்ரீ சந்திரசேகரர் திருநாமத்துடன் காமகோடி பீடத்தை ஏற்றவனே
வேதங்கள் நான்கும் கற்று தெளிந்து சாத்திரம் பலவும் அறிந்தவனே
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர ஜெகத் குருவே . 2
………………………………………………….
ஈரைந்து வயதில் குடும்பத்தை துறந்து
காவி உடையினை ஏற்றவனே
கால்நடையாக தேசமும் சென்று இந்து தருமத்தை காத்தவனே
சென்ற இடங்களில் அற்புதம் புரிந்து அருள்தனை மழையாய் பொழிந்தனனே
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர ஜெகத் குருவே . 3
…………………………………………………..
நாடிடும் அன்பர் கவலயை நீக்கி நலம் தனை நல்கிய நாதன் அவன்.
பகத்ர் துயர் கலையும் பரந்தாமன் அவன் பார்வையால் அருளும் அருட்சீலன்
வேற்றுமை காணா பேதங்கள் களைந்து
ஹரியும் ஹரணாய் திகழ்ந்தவனே
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர ஜெகத் குருவே . 4
………………………………………………….
ஆலயம் தனிலே விளக்கது எரிய ஆவன பலவும் செய்தவனே
வேதங்கள் தழைக்க (பாட} சாலைகள்
அமைத்து
வேதங்கள் கற்றிட செய்தவனே
நடைதனில் வேகம் அறிவில் விவேகம்
அனைத்தையும் தன்னுள் கொண்டவனே
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர ஜெகத் குருவே 5
………………………………………………….
பௌர்ணமி நிலவாய் புவி தனில் ஜொலித்து முழு நிலவாக நின்றவனே
கருனை பார்வையால் கஷ்டங்கள் நிங்கிட அருள் தனை தந்த ரக்ஷகனே
தூற்றிய அன்பரும் போற்றிடும் விதமாய்
துயர்களை நீக்கிய அருட் சுடரே
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர ஜெகத் குருவே 6
………………………………………………….
சந்திரமௌளீஸ்வர பூஜைகள் செய்து
தரித்தனன் அவனது அவதாரம்
தவங்களை புரியும் தருணத்தில் கண்டால்
அவரே கமாட்சி மறு வடிவம்
வில்வம் கொடுத்த பால்கன் கேட்ட
முக்தி பெற்றிட அருள் புரிந்தாய்
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர ஜெகத் குருவே 7
……………………………………………………
கலியுகம் கண்ட கருணையின் தெய்வம்
காஞ்சியில் வாழ்ந்த மா முனியே
பாரினில் உதித்த பரமனின் உருவே
ஜெகத் குரு சந்திர சேகரரே
உனை சரண் அடைந்து பத மலர் பணிந்தோம்
காத்திட வேண்டும் ஜெகத்குருவே
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர ஜெகத் குருவே 8
…………………………….. .. ………….. …
பக்தரின் தெய்வம் பரமனின் வடிவம்
பரம்பொருள் எங்கள் சங்கரனே
ஞானிகள் போற்றும் பேரோளி கொண்டு
ஞானமே உருவாய் நின்றவனே
தெய்வமாய் நின்று அருள் மழை
பொழிவாய்
ஸ்ரீ சந்திர சேகரனே
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
ஜய ஜய சங்கர ஜெகத் குருவே 9
………ஸ்ரீ
………………………………………….. …….
Periyava Navamani Malai content wonderful. Sweet, cute &short.