இன்று நாம் கான இருப்பது மேதா ஸூக்தம் :
” மேதா தேவி ஜுஷ மாணா ந ஆகாத் விஸ்வாசி பத்ரா ஸு ம னஸ்யமாநா ” !
என தொடங்கி…..
மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோ ப்ராஜோ ததாது ! என முடிகிறது இவ் ஸூக்தம்.
மேதா என்றாலே உள் வுணர்வுடன் கூடிய அறிவு, ஞானம், தெளிவை குறிக்கிறது
மேதா ஸூக்தம் யஜுர் வேதத்திலிருந்து வந்தது. இது ரிக் வேதத்திலும் காணப்படுகிறது.
நாம் செய்யக்கூடிய செயல்களும் முயற்சிகளும் உள்வுணர்வின் அடிப்படயிலேயே நடக்கிறது. அந்த உள்வுணர்வு நல்ல முறையில் ஆக்கவும் செயல் படவும் பிரார்த்திப்பதே இவ் ஸூக்தம்.
ஓ தேவியே நாங்கள் பயனற்ற பேச்சாலும் செயலாலும் விலை மதிக்க முடியாத நேரத்தையும் காலத்தையும் வீணடித்துவிட்டோம். உன்
க்ருபையால் எங்களுக்கு நல்ல ஞானத்தையும், செல்வத்தையும், அமைதியையும் மற்றும் செழிப்பையும் கொடு…..
தேவியின் ஒளி சூரியனின் கிரணங்கள் போல எங்கும் பரந்துள்ளது.
இப்படிப்பட்ட மேதா ஸுக்தத்தை பாராயணம் செய்து நல்ல ஞானத்தையும் நல்ல அறிவையும் தெளிவையும் பெறுவோமாக….
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
……… ஸ்ரீ