நாம் தெரிந்து கொள்ளப் போவது
வடபழனி ஆண்டவர் திருக்கோவில்
வரலாறு:
இத் திருக்கோவில் அமைய முதற் காரண கர்த்தா அண்ணாசாமி நாயக்கர் ஆவார்.
அண்ணாசாமி நாயக்கர் சிறு வயது முதலே இறை பக்தி கொண்டவர். படிப்பில் நாட்டமில்லாமல் பள்ளி படிப்பை கைவிட்டார். இறை பக்தி கொண்ட இவர் உரிய வயதில் திருமணம் செய்து கொண்டு இரண்டு புதல்வர்களை பெற்றெடுத்து சென்னை கோடம்பாக்கம் அருகில் வசித்து வந்தார்.
நாயக்கர் வயிற்று வலி நோயினால் பாதிக்கப்பட்டு அதை தீர்க்க உபாயங்களை தேடினார். அப்போது பழனியிலிருந்து வந்த ஒரு சாதுவை கண்டு வணங்கி நோய் தீர வேண்டினார்.
சாதுவோ வேலுண்டு வினையில்லை – மயிலுண்டு பயம் இல்லை – குகன் உண்டு குறையில்லை என் கூறி அவரை கிருத்திகை நாளில் திருப்போரூர் சென்று முருகனை வழிபடவும், கிருத்திகையில்திருத்தணி சென்று நூதன காணிக்கை செலுத்துவும், பிறகு பழனி சென்று தரிசனம் செய் நோய் விலகி விடும் என கூறினார்.
அதன்படி ஒவ்வொரு கிருத்திகை அன்றும் ( பல் வேறு சிரமத்திற்கு உள்ளாகியும்) திருப்போரூர் சென்று வழிபடுவார். அப்படி வழிபட்டு சிதம்பர சுவாமிகள் சன்னதி எதிரே படுத்து கண் அயர்ந்தபோது கனவில் ஒரு பெரியவர் வந்து உன் வீட்டிலேயே முருகன் குடிகொண்டிருக்கும் போது அவனை தேடி இங்கு ஏன் அலைகிறாய்.வீட்டிலேயே பூஜிக்க சொன்னார்.
அது முதல் வீட்டிலேயே காலை மாலை என பூஜித்து வந்தார். சாது சொன்னது போல் கிருத்திகை நாளன்று திருத்தணி சென்று கொடிமரம் முன் அமர்ந்து தியானம் செய்தார். தியானம் முடிந்து கண்விழித்து பார்த்த போது கொடிமரம் அருகே காணிக்கை உண்டியல் கண்ணில் பட முருகனுக்கு புதுமையான காணிக்கை அளிக்க தனது நாவால் முருகனை பாடாத நா எதற்கு என தனது நாவை அறுத்து கொடிமரம் பக்கத்தில் வைத்தார். அதனை பார்த்தவர்கள் திகைத்து நின்றனர். அப்பொழுதும் முருகா முருகா என முணுமுணுத்தார். ஆலயத்தை சுற்றி வந்த அவர் ஒரு முருகன் படத்தை பார்த்து நிற்க , ஒரு அன்பர் அதை அவருக்கு அளித்தார்.
அந்த படத்தை தனது பூஜையில் பூஜித்து வர, அவரது வயிற்று வலி முற்றிலும் நீங்கியது. அத்துடன் அவரது ‘ நா ‘ வளர தொடங்கியது.
இவரது தீவிர பக்தியின் அருமை கண்டு மக்கள் தங்கள் குறைகள் அகல தீர்வு கேட்டனர். இவரும் முருகனை வழிபட சொல்வார். இப்படியாக குறி மேடையில் உட்கார்ந்து முருகன் அருளால் குறி சொல்வார். அவர் சொல்வது அனைத்தும் பலித்தது குறி மேடு மிகவும் பிரபலமானது.
அடுத்து சாது சொல்லியவாறு கால் நடையாக பழனி சென்று அங்கு சில நாட்கள் தங்கிவந்த அவர் தண்டாயுதபாணியை தரிசித்து விட்டு மலையிலிருந்து இறங்கும் போது ஒரு பெரிய முருகன் படம் பார்க்க அதை வாங்க காசில்லாமல் ஏங்க, மறுநாள் காலை அந்த கடைக்காரர் அந்த படத்துடன் மாலையையும் சேர்த்து வழங்கினார்.
அதை பெற்றுக்கொண்டு வந்தவர் குறிமேட்டில் அந்த படத்தை வைத்து வழிபட துவங்கினார்.தொடர்ந்து குறி சொல்லி வந்தார்.
இவரது மகிமையை அறிந்து ரத்தின சாமி செட்டியார் இவரது பூஜைக்கு வேண்டிய பொருட்களை அளித்து
வந்தார்.
நாயக்கர் பின்னாளில் தம்பிரான் என அழைக்கப்பட்டார்.
குறிமேட்டில் முருகனுக்கு ஆலயம் கட்டும் எண்ணத்தை வெளிபடுத்த அதை ஏற்று செட்டியார் பழனி ஆண்டவர் சிலயை வடிக்க ஸ்தபதியிடம் சொல்ல, கோவில் வேலைகள் நடந்து வரும் வேளையில், அண்ணாசாமி தம்பிரான் இறைவன் திருவடிசேர்ந்தார்.
அவரின் பணியினை தொடர்ந்த ரத்தினசாமி தம்பிரான் குருவின் ஆணைப்படி பாவாடை தரித்து கொண்டார்.(நா வினை அறுத்து கொள்ளல்) தொடர்ந்து கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்தார். மேலும் குறி கேட்க வரும் அன்பர்கள் கொடுக்கும் காணிக்கையை வைத்து ஆலய பூஜைகளை செய்துவந்தார்.
மேலும் இந்த கோவிலை வட பழனி ஆண்டவர் கோவில் என்று அழைக்க வேண்டும் என கூறினார். மேலும் வட பழனி கோவில் பிரபல்யமானது.
இவருடன் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பாக்யலிங்க தம்பிரானும் சேர்ந்து ஆலய தொண்டினை செய்தனர். இவரும் குருவை போல பாவாடை தரித்து கொண்டார். 1865 ஆண்டு ரத்தினசாமி தம்பிரான்
இறைவன் திருவடி சேர்ந்தார். பிறகு சுமார் 50 ஆண்டு காலம் கோவிலுக்கு தொண்டு செய்து வந்த பாக்யலிங்க தம்பிரான் 1931 ஆம் ஆண்டு முருகன் திருவடி அடைந்தார்.
இந்த மூன்று சாதுக்களின் சமாதி களும் கோவிலின் மிக அருகே ஒருங்கே அமைந்துள்ளது.
இப்படியாக மூன்று சாதுக்களால் அமைந்த இந்த ஆலயம் இன்றும் தென் பழனிக்கு நிகராக வட பழனிகோவிலாக (வடபழனி ஆண்டவர்) போற்றப்படுகிறது.
இன்றும் அந்த குறி மேடையை கோவிலின் தென்கிழக்கு பகுதியில் காணலாம். அதுபோல அண்ணா சாமி தம்பிரான் பழினியில் இருந்து கொண்டுவந்த தண்டாயுதபாணி படத்தை கோவில் உள் பிரகார வடக்கு மண்டபத்திலும் காணலாம்.
இப்படியாக இந்த வடபழனி கோவில் அமைக்கப்பட்டது.
” தெய்வீக பேரொளி தேடியடைந்த பின் சிந்தனை உண்டாமோ !
ஞான வெள்ள பெருக்கை வீழ்ங்கிய
பின்னரும் வேதனை உண்டாமோ !!….”
என்று பாடி குமரனின் பாதம் பணிவோம்.
இங்குள்ள ஆண்டவரின் சிறப்பினை நாளை பார்ப்போம்.
லோகா சமஸ்தா சுகிநோ
பவந்து …..
…….ஸ்ரீ