ஶ்ரீ மஹா பெரியவா 108 போற்றி

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது ஶ்ரீ மஹா பெரியவா 108 போற்றி


ஓம் ஸ்ரீ மஹாபெரியவாப் போற்றி

ஓம் ஸ்ரீ மஹாபெரியவாப் போற்றி
ஓம் ஸ்ரீ ப்ரணவ ஸ்வரூபா போற்றி
ஓங்கார ரூபா சங்கராப் போற்றி
ஓமெனும் நாத ரூபனே போற்றி!

அகில நாயகா ஈச்வராப் போற்றி
அகிலாண்டகோடி அருளேப் போற்றி
அனைத்துயிர்க்கும் இறைவாப் போற்றி
அல்லல் களைந்த முனியேப் போற்றி !

விழுப்புரம் அளித்த விமலனேப் போற்றி
விசாக முழு நிலவில் ஜனித்தாய்ப் போற்றி
கருணை கடலே போற்றி போற்றி
கண்ணின் மணி ஆனாய்ப் போற்றி!

மகாலக்ஷ்மி ஈன்ற மாணிக்கமே போற்றி
முத்தை அளித்த சுப்ரமணியரேப் போற்றி
மானிடம் உய்க்க பிறந்தோனேப் போற்றி
முனியின் பாத கமலமேப் போற்றி போற்றி!

ஸ்ரீ ஆதி சங்கரா ஈஸ்வராப் போற்றி
ஸ்ரீ சந்திரசேகரா சங்கராப் போற்றி
ஸ்ரீ ஜயேந்திரர் குருவேப் போற்றி
ஸ்ரீ விஜயேந்திரர் பரமகுருவேப் போற்றி

பூர்வாஸ்ரம சுவாமினாதாப் போற்றி
பூரணத்வம் அடைந்தோனேப் போற்றி
பூர்வ ஜென்மப் பரமனேப் போற்றி
பூரண சந்திர ஒளியானாய்ப் போற்றி

காமகோடி வழி நடந்தோனேப் போற்றி
காமகோடி மடத்தின் காபந்துவேப் போற்றி
காமக்ஷி அன்னையின் அருளேப் போற்றி
காமாக்ஷி கடைவிழியில் இருந்தோனே போற்றி

நடமாடும் தெய்வமே சங்கராப் போற்றி
நடப்பவை நின் கருணையெனப் போற்றி
நடந்தவையாவும் நின்னருளே போற்றி
நடக்க சக்தி அளித்தோனேப் போற்றி !

தெய்வத்தின் குரல் ஆனாய்ப் போற்றி
தெய்வத்தின் குரல் ஆனாய்ப் போற்றி
தெய்வத்தின் மறு உருவமேப் போற்றி
தெய்வம் அளித்த வரமேப் போற்றி
தெய்வ சங்கல்பச் சங்கராப் போற்றி !

ஜகமே குருவாய்க் கொண்டாய்ப் போற்றி
ஜகமே வணங்கும் குருவேப் போற்றி
ஜகம் உய்ய ஆசி அளித்தாய்ப் போற்றி
ஜகத் குருவேப் போற்றி போற்றி !!

வேதரக்ஷக வித்தனேப் போற்றி
வேத பரிபாலன வேந்தனேப் போற்றி
வேதம் ஓங்க உழைத்தோனேப் போற்றி
வேதத்தின் சுவாசமேப் போற்றி போற்றி !

தருமம் தழைக்க வித்திட்டோனேப் போற்றி
தருமம் காக்கும் தயாளாப் போற்றி
தரும அறக்கட்டளைக் கர்த்தாவேப் போற்றி
தரும சீலனே தயாபராப் போற்றி போற்றி !

நாடினவர் மனம் குளிர்வித்தாய்ப் போற்றி
நாடினவர் அல்லல் களைந்தாய்ப் போற்றி
நாடினவர் வரம்தனை அளித்தாய்ப் போற்றி
நடையில் வேகம் கொண்டாய்ப் போற்றி !

சிவனின் பிரதம சீடனேப் போற்றி
சிவனின் தமையனேப் போற்றி
சிவனின் அவதாரமேப் போற்றி
சிவன் மனங்குளிர் மைந்தாப் போற்றி !

பூமியின் ஜகத்குருவேப் போற்றி
பூமண்டலப் பிரானேப் போற்றி
பூதேவி அருள் கொண்டாய் போற்றி
பூரண ஆயுள் அடைந்தாய்ப் போற்றி !

காலடி சங்கரன் இனியச் சீடனேப் போற்றி
காலடியால் புவியை அளந்தோனேப் போற்றி
காலபயம் நீக்க உடன் நின்றாய்ப் போற்றி
காலடி ஓயுமுன்னே ரக்ஷிப்பாய்ப் போற்றி !

காஷ்ட மௌனம் கொண்டாய்ப் போற்றி
கஷ்டம் தீர கடுந்தவம் செய்தாய்ப் போற்றி
கலியுக தெய்வம் மஹாதேவாப் போற்றி
கல்மிஷமில்லா வாழ்வளிப்பாய்ப் போற்றி !

அத்வைத தத்துவம் அருளினாய்ப் போற்றி
அத்யந்த அருளாசி அளித்தாய்ப் போற்றி
அத்தர் மணம் கொண்டாய்ப் போற்றி
அதிமதுர வாக்களித்தோனேப் போற்றி !

மூலப்பொருள் மறைக் காப்போனேப் போற்றி
மூத்தோன் அருள் கொண்டாய்ப் போற்றி
மூவுலகு முனிவன் சங்கராப் போற்றி
முக்கனி சாராய் இனித்தாய்ப் போற்றி !

தாயுள்ளம் கொண்ட தாயுமானவாப் போற்றி
தாய் காமாக்ஷி உளம் இருந்தாய்ப் போற்றி
கச்சி ஏகம்பன் மனதில் கொண்டாய்ப் போற்றி
கந்தக்கோட்டக் கந்தனை கண்டாய்ப் போற்றி !

இந்துமதம் தழைக்க முனைந்தோனேப் போற்றி
இந்து தர்மத்தின் அரண் ஆனாய்ப் போற்றி
பாமரன் மனம் மகிழ்ந்தோனேப் போற்றி
பரமனின் உன்னதச் சீடனேப் போற்றி போற்றி !

மூதூரார் அமைப்பை அமைத்தாய்ப் போற்றி
முக்கால ஞானியே முனிவரேப் போற்றி
முட்களில்லாப் பாதை அளித்தாய்ப் போற்றி
மூலட்டான்னேப் போற்றி போற்றி !

நெல்பொரிதனை உண்டாய்ப் போற்றி
நிலவின் ஒளிதனை அளித்தாய்ப் போற்றி
பல மதத்தினர் தன்னிடம் ஈர்த்தாய்ப் போற்றி
பல நாட்டினர் உன்னருள் அடையப் போற்றி !

கேட்காமல் வரம் அளிப்பவனேப் போற்றி
கலியுகம் கண்ட சித்தரேப் போற்றி
பஞ்சாக்னி தவம் புரிந்தவரேப் போற்றி
பஞ்சபூதத்தின் மறு உருவேப் போற்றி !

நகரேஷு காஞ்சி மகானேப் போற்றி
நாத்திகனை தன்வயம் ஆக்கினாய்ப் போற்றி
மாந்தரின் இஷ்ட தெய்வமேப் போற்றி
மங்கள ரூபனே சங்கராப் போற்றி போற்றி !

அற வழிக் காட்டினாய்ப் போற்றி
அறிவில் சிறந்தோனேப் போற்றி
அடியாரை அணைப்பவனேப் போற்றி
ஆன்மீக ஒளிச்சுடரேப் போற்றி போற்றி !

கருணாமூர்த்திக் கலியுக வரதாப் போற்றி
காஷாயம் தரித்த அண்ணலேப் போற்றி
கண்கண்ட தெய்வம் குருவேப் போற்றி
கருணையின் கடலேப் போற்றி போற்றி !

பன்மொழி வித்தகாப் போற்றி
பன்முகப் பண்டிதாப் போற்றி
பார் புகழ்ப் அடைந்தாய்ப் போற்றி
பார் வணங்கும் திருவடியேப் போற்றி

லோகா ‌சமஸ்தா சுகிநோ பவந்து..

ஶ்ரீ

Leave a Reply

Scroll to Top
%d bloggers like this: