இன்று நாம் அறிய போவது ஸ்ரீ ஸூக்தம் :
உலக வாழ்க்கைக்கு இன்றியமையாதது செல்வம். அதை வேண்டி பிரார்த்தனை செய்வதாக அமைந்துள்ளது இந்த ஸ்ரீ ஸூக்தம்.
” ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜ தஸ்ராஜாம் ” என தொடங்குகிறது…… இந்த ஸூக்தம்
எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே ! பரமனே ! பொன்னின் நிறம் கொண்டவளும், பாவங்களை போக்குபவளும், தங்க ஆபரணங்களை அணிந்தவளும்
லட்சுமி என அழைக்கும் திருமகளை என்னிடம் எழுந்தருள செய்வாய்.
அஷ்ட ஐஸ்வர்யங்களும் தரும் திருமகளை என்னிடமிருந்து எப்பவும் விலகாதிருக்க செய்ய வேண்டுகிறேன்.,
மகிழ்ச்சி நிறைந்தவளே, தாமரை மலரில் வீற்றிருப்பவளே இங்கு வந்து வாசம் செய்திட வேண்டுகிறேன்.
செல்வத்தின் தலைவன் குபேரனும், புகழின் தேவனும் என்னிடம் வர அருள் புரிவாய்.
எனது இல்லத்தில் அணைத்து ஏழ்மைகளையும், வறுமைகளையும் அகற்றி சுபிக்ஷம் தருவாயாக !
நறுமணத்தின் இருப்பிடமே, எவராலும் வெல்ல முடியாதவளே மஹா லட்சுமியே சகல ஐஸ்வர்யங்களும் எனக்கு அருள வேண்டுகிறேன்.
இந்த சூக்தத்தை தினமும் பாராயணம் செய்துவந்தால் மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண கடாக்ஷம் கிடைக்கும், அவர்களுக்கு சர்வ ஐஸ்வர்யங்களும் வந்து சேரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை !
லோகா சமஸ்தா சுகினோ பவந்து… !
……. ஸ்ரீ