இன்று நாம் காணவிருப்பது
“ஹோமங்கள் மற்றும் அதன்
பலன்கள் ”
ஹோமங்கள்
தெய்வ வழிபாட்டின் ஒரு வகை ஆகும். ஹோமங்கள் அக்னி முலம் தெய்வங்களை வழிபடுதலாகும். அக்னி சுத்தமானது. உக்கிரமானது.
ஹோமங்கள் வைதீக முறை ஆகம முறை சாக்த முறை பரிகார ஹோமங்கள் என பலவகை உண்டு.
வேதங்கள் அடிப்படையில் செய்யும் வைதீக ஹோமங்களில் அக்னியில் இறைவனை ஆவாஹனம் செய்வதில்லை.
“அக்னிம் தூதம் வ்ருணீமஹே ”
என்கிறது வேதம். சூர்ய பகவானை தூதுவனாக கொண்டு இந்த ஹோமங்கள் செய்யப்படுகிறது. ஆகம மற்றும் சாக்த முறையில் இறைவனை ஆவாஹனம் செய்வார்கள். இவர்கள் கொடுக்கும் ஆஹுதிகளை அக்னி பகவானே நேரில் பெற்று கொளவதாக ஐதீகம்.
ஹோமங்கள் செய்யும் போது அக்னி பகவானிடம் அந்தந்த தெய்வ மந்த்ரங்களை சொல்லி தெய்வதற்குரிய வஸ்துக்களையும் சமர்ப்பிக்கிறோம்.
அக்னிக்கு அர்பணிக்கப்படும் அனைத்தும் சூரியபகவான் உதவியுடன் இறைவனை மற்றும் எவர் குறித்து ஹோமம் நடத்தப்படுகிறதோ அவரை சென்றடைகிறது. அதே போல் சூரியபகவான் மூலமாகவே அதற்குறிய பலனும் நம்மை அடைகிறது.
வேதமே அக்னியை முதன்மையாக போற்றுகிறது. ஏன் நமது வாழ்க்கையில் கூட அக்னி முதன்மையிலேயே அமைந்துள்ளது.
ஹிந்துக்களின் திருமணங்கள் கூட அக்னி சாக்ஷியாகத் தான் நடக்கிறது. தினசரி வாழ்க்கையே அக்னியை முன்னிறுத்தி நடக்கிறது. உதாரணம் சமையல் அறை, பயன்படுத்தும் மின்சாரம், மற்றும் வாகனம் எல்லாமே அக்னியின் ஆதாரம்.
ஹோமங்களில் நாம் அக்னியில் சமர்பிக்கும் வஸ்துக்கள் எப்படி அந்த தெய்வங்களுக்கு போய் சேரும் என கேள்வி எழலாம்.
உதாரணமாக நாம் எழுதிய
கடிதங்களில் பெறவேண்டியரின் விலாசம் எழுதி தபால் பெட்டியில் போட்டுவிடுகிறோம்
போஸ்ட்மேன் அதை பிரித்து அந்தந்த நபரின் விலாசங்களில் சேர்ப்பது போல சூர்யபகவான் அக்னி மூலம் பெறப்பட்டதை அந்தந்த தெய்வத்திடம் அந்த பலனனை கொண்டு சேர்கிறார்.
ஹோமங்கள், கிரஹப்ரவேசம், நல்ல கார்யங்கள் துவங்கும் சமயம், கோவில் கும்பாபிஷேகம் போன்ற நேரங்களில் நடத்தப்படும். மேலும் பல விஷ யங்களுக்காகவும் நடத்தப்படும்.
ஹோமங்களும் அதனால் கிடைக்கும் பலன்களையும் பார்க்கலாம்.
1 மஹா கணபதி ஹோமம் : தடைகள் நீங்க, கார்ய வெற்றி, லக்ஷ்மி கடாக்ஷம் பெற.
2.நவக்கிரஹ ஹோமம் : நவகிரஹங்களின் கேடு நீங்கி, மகிழ்ச்சி பெற.
3.சுதர்சன ஹோமம் : ஏவல், பில்லி, சூன்ய தொல்லைகள் நீங்க.
4. சண்டி ஹோமம் : தரித்திரம் மற்றும் பயம் அகல.
5. தன்வந்திரி ஹோமம் : நோய்களிலிருந்து விடு பட
6.குபேர ஹோமம் : செல்வம் வளர
7. துர்கா ஹோமம் : எதிரிகள் தொல்லை நீங்க.
8. ஆயுஷ் ஹோமம் : ஆயுள் விருத்திக்கு செய்வது.
9. ஸ்ரீ ஹயக்ரீவர் , சரஸ்வதி, தக்ஷிணாமூர்த்தி ஹோமங்கள் : கல்வி மேன்மைக்கு. மற்றும் கலைகள் வளர.
10. தில ஹோமம் : பித்ருகளை நினைத்து செய்வது………
இப்படியாக அக்னி மூலம் செய்யும் வழிபாட்டை ஹோமம் என்றும் யாகம் என்றும் யக்ஞம் என்று கூறுவர்.
நம்முடைய பிரச்சனை களுக்கு நிவர்த்தி கிடைக்க ஏற்ப ஹோமங்கள் செய்து நல்ல பலன்களை பெற்று வாழ்வில் வளமுடன் வாழ வேண்டுவோமாக ! …….
லோகா சமஸ்தா சுகினோ பவந்து………………..
……. ஸ்ரீ